Home /News /entertainment /

Chess Olympiad 2022: செஸ் ஒலிம்பிக் துவக்க விழாவில் ரஜினிகாந்த் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட படம்!

Chess Olympiad 2022: செஸ் ஒலிம்பிக் துவக்க விழாவில் ரஜினிகாந்த் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட படம்!

மகளுடன் ரஜினிகாந்த்

மகளுடன் ரஜினிகாந்த்

”அப்பாவுடன் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்து கொள்ள புறப்பட்டுவிட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார் ஐஸ்வர்யா.

    Chess Olympiad 2022: செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துக் கொள்கிறார்.

    சென்னை, மாமல்லபுரத்தில், 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடக்கிறது. இதனை பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார். இதில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்.

    போட்டியில் பங்கேற்க வரும் வீரர்கள், வீராங்கனைகளை வரவேற்க தமிழக அரசின் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதோடு வீரர்கள், ஊடகவியலாளர்கள், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பினர் மற்றும் விருந்தினர்கள் தங்குவதற்காக நவீன வசதிகளுடன் கூடிய 2 ஆயிரம் அறைகள் மற்றும் வாகன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    இதையடுத்து செஸ் போட்டியில் கலந்துக் கொள்ளும் சர்வதேச வீரர்களும், பார்வையாளர்களும் சென்னைக்கு படையெடுத்துள்ளனர். வெளிநாட்டு போட்டியாளர்கள் பலர், தமிழக அரசின் ஏற்பாடுகளை பாராட்டி ட்வீட் செய்து வருகின்றனர். இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துக் கொள்ள நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்டோருக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.



    செஸ் எனக்கு மிகவும் பிடித்த இன்டோர் கேம் - வீரர்களுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதைத் தொடர்ந்து தற்போது நடிகர் ரஜினிகாந்த் தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவுடன் செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா நடக்கும் ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு புறப்பட்டுள்ளார். அப்பாவுடன் எடுத்துக் கொண்ட செல்பி படத்தை ட்விட்டரில் பகிர்ந்த ஐஸ்வர்யா, ”அப்பாவுடன் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்து கொள்ள புறப்பட்டுவிட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக தனக்கு மிகவும் பிடித்த இன்டோர் கேம் செஸ் என்று குறிப்பிட்டு, செஸ் வீரர்களுக்கு தனது வாழ்த்துகளை ட்விட்டரில் தெரிவித்திருந்தார் ரஜினிகாந்த்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Aishwarya Rajinikanth, Rajinikanth

    அடுத்த செய்தி