ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பொன்னியின் செல்வன் படத்தில் வாய்ப்பு கேட்ட ரஜினி, மறுத்த மணிரத்னம் - காரணம் என்ன தெரியுமா?

பொன்னியின் செல்வன் படத்தில் வாய்ப்பு கேட்ட ரஜினி, மறுத்த மணிரத்னம் - காரணம் என்ன தெரியுமா?

ரஜினிகாந்த் - மணிரத்னம்

ரஜினிகாந்த் - மணிரத்னம்

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டதற்கு மனிரத்னம் மறுத்து விட்டதாக கூறியிருந்தார் ரஜினிகாந்த்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மணிரத்னத்திடம் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்ட ரஜினிக்கு ‘நோ’ என்பது பதிலாய் கிடைத்திருக்கிறது. ரஜினியே வாய்ப்பு கேட்டு மணிரத்னம் ஏன் மறுத்தார் தெரியுமா?

  பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கமல்ஹாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மணிரத்னத்துடன் பணியாற்றிய அனுபவம் மற்றும் பொன்னியின் செல்வன் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை கூறினார்.

  "நான் புத்தகம் அதிகம் படிப்பேன். முதலில் புத்தகத்தின் பக்கம் என்ன என கேட்பேன். 200, 300 பக்கங்கள் என்றால் ஓகே. பொன்னியின் செல்வன் பக்கத்தை கேட்டதும் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அந்த பக்கம் போகவில்லை.

  ஒரு முறை மறைந்த முதல்வர் ஜெயலலிதா வந்திய தேவன் கதாபாத்திரத்தில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் என்று கூறியிருந்தார். அதை கேட்ட உடன் எனக்கு குஷியாகிவிட்டது. உடனே கொண்டுவாட புத்தகத்தை என்றேன். படித்தால் போயிகிட்டே இருக்கிறது. நந்தினி கதாபாத்திரம் அவ்வளவு சிறப்பாக இருந்தது. கல்கி இருந்திருந்தால் அவர் வீட்டுக்கு சென்று காலில் விழுந்திருப்பேன்.

  அடிக்கடி இடத்தை மாற்றும் மீரா மிதுன்... கைது செய்யாத காவல்துறை மேல் நீதிபதி அதிருப்தி

  மணிரத்னம் பொன்னியின் செல்வன் கதையை படமாக்கும் அறிவிப்பு வந்ததும், எனக்கு ஒரு கதாபாத்திரம் தரும்படி கேட்டேன். அவர் முடியாது என்றார். பெரிய பழுவேட்டரையார் கேரக்டரிலாவது நடிக்கிறேன் என்றேன், முடியவே முடியாது என மறுத்துவிட்டார்” என்றார் ரஜினிகாந்த்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதையடுத்து ரஜினிக்கு ஏன் வாய்ப்பு தர மறுத்தீர்கள் என பொன்னியின் செல்வன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மணிரத்னத்திடம் கேட்டதற்கு, “ரஜினியை நடிக்க வைத்தால் கல்கி மற்றும் ரஜினி என இருவரின் ரசிகர்களிடமும் மாட்டி கொள்ள நேரிடும். ஆகையால் அவரை வேண்டாம் என்று கூறி விட்டேன்” என்று பதிலளித்தார் மனிரத்னம்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Mani ratnam, Ponniyin selvan, Rajinikanth