சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1970-களில் மேடை நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது எடுத்தப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரஜினி என்ற மூன்றெழுத்துக்கு ரசிகர்களிடம் இருக்கும் வசீகரம், காலம் கடந்து இன்றும் துளியும் குறையவில்லை. ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருங்கிக்கிடந்த தமிழ் சினிமாவின் வணிக எல்லையை, உலகளவில் விரிவுபடுத்தியதில் ரஜினி படங்களுக்கு பெரும்பங்குண்டு.
குறிப்பாக கருப்பு வெள்ளை காலத்தில் களம் கண்ட ரஜினி, ஈஸ்ட்மென் கலர், டிஜிட்டல், அனிமேஷன், 3டி என நான்கு வெவ்வேறு தொழில்நுட்பத்தில் நடித்துவிட்டார். இது இந்திய அளவில் வேறெந்த நடிகருக்கும் கிடைக்காத மிகப்பெரிய கௌரவம்.
’சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்’ என்ற பாடலுக்கேற்ப, ரஜினியை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அவர் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு ‘அண்ணாத்த’ திரைப்படம் வெளியான நிலையில், அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதன்படி மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கவிருக்கிறார் ரஜினி. இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார்.
AK61 படத்திற்காக இவ்வளவு உடல் எடையைக் குறைக்கிறாரா அஜித்?

ரஜினிகாந்த்
ரிலீஸ் தேதியுடன் நடிகர்களின் லுக்கை வெளியிட்ட பொன்னியின் செல்வன் படக்குழு!
இந்நிலையில் ரஜினியின் பழைய படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 70-களில் நாடகக் கலைஞராக மேடை நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட படம் தான் அது. கர்நாடகாவில் அந்த நாடகம் அரங்கேறியிருக்கிறது. ஸ்டைலான, மாஸான ரஜினியை பார்த்துப் பழகிய ரசிகர்கள், அவரின் அரிதான அந்தப் படத்தப் பார்த்து ஆச்சர்யத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.