Home /News /entertainment /

‘நட்சத்திரம் நகர்கிறது ரஞ்சித்தின் பெஸ்ட் படம்’ – ரஜினிகாந்த் பாராட்டு

‘நட்சத்திரம் நகர்கிறது ரஞ்சித்தின் பெஸ்ட் படம்’ – ரஜினிகாந்த் பாராட்டு

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

சாதி, மத, நிறங்கள் வேறுபாடுகளை தாண்டி தன்பால் ஈர்ப்பாளர்கள், திருநங்கைகளின் காதல் உள்ளிட்டவற்றையும் நட்சத்திரம் நகர்கிறது படத்தில் பேசியுள்ளார் பா. ரஞ்சித்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    நட்சத்திரம் நகர்கிறது ரஞ்சித்தின் பெஸ்ட் படம் என ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் கடந்த புதன்கிழமை அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்த படத்தில் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், கலையரசன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். முந்தைய ரஞ்சித் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் வெளிவந்துள்ளது

    Exclusive : தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகள் உதவியாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

    இந்தப்படத்தில் காதலை சற்று விரிவாக ரஞ்சித் பேசியுள்ளார். சாதி, மத, நிறங்கள் வேறுபாடுகளை தாண்டி  தன்பால் ஈர்ப்பாளர்கள், திருநங்கைகளின் காதல் உள்ளிட்டவற்றையும் பேசியுள்ளார் பா. ரஞ்சித்

    என்னது..?! மகாலட்சுமிக்கும் எனக்கும் 20 வயது வித்தியாசமா?? தயாரிப்பாளர் ரவிந்தர் விளக்கம்…

    இந்த படத்திற்கு கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். தென்மா இசை அமைத்துள்ளார். நட்சத்திரங்கள் நகர்கிறது படத்தில் கலை இயக்குனர் ஜெயா ரகுவின் உழைப்பு பாராட்டை பெற்றுள்ளது. இந்த படத்தை பார்த்த பாலிவுட்டின் முன்னணி இயக்குனர் அனுராக் கஷ்யப் வெகுவாக பாராட்டி இருந்தார்.



    இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நட்சத்திரம் நகர்கிறது படத்தைப் பாராட்டி உள்ளார்.



    இது தொடர்பாக ரஞ்சித்திடம் பேசிய ரஜினிகாந்த், ‘’இயக்கம், எழுத்து, நடிகர்கள் தேர்வு, நடிகர்களின் நடிப்பு, கலை, ஒளிப்பதிவு, இசை என அனைத்து துறைகளிலும் பா. ரஞ்சித் உடைய பெஸ்டான படைப்பு நட்சத்திரம் நகர்கிறது’’ என்று கூறியுள்ளார். இந்த தகவலை ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Pa. ranjith, Rajinikanth

    அடுத்த செய்தி