அண்ணாத்த படத்துக்காக பயங்கரமான கெட்டப் - வில்லன் வெளியிட்ட வீடியோ

நடிகர் ஜகபதி பாபு

ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் நடித்து வரும் ஜகபதி பாபு தனது சமூகவலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  • Share this:
சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

சமீபத்தில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் இயக்குநர் சிவா இருக்கும் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்த நிலையில் தற்போது படத்தின் வில்லன் ஜகபதி பாபு தனது அறையில் எடுக்கப்பட்ட வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில், “ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்துக்காக ஒரு பயங்கரமான கெட்டப்பில் வர முயற்சிக்கிறேன். இறுதியாக, அரவிந்தாசமீதாவின் பாசி ரெட்டி கெட்டப்பை தோற்கடிப்பேன்.” என்றும் ஜகபதி பாபு குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் அண்ணாத்த ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக ஏப்ரல் 8-ம் தேதி சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார். தொடர்ந்து அங்கு 3 வாரங்கள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது. அதைமுடித்து விட்டு சென்னை திரும்பும் ரஜினிகாந்த் மே 3-ம் தேதி டெல்லியில் நடக்க இருக்கும் விருது விழாவில் கலந்து கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 
View this post on Instagram

 

A post shared by Jaggu Bhai (@iamjaggubhai_)


‘அண்ணாத்த’  திரைப்படம் 2021-ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4-ம் தேதி வெளியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: