• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Annaatthe: ரஜினிகாந்தின் ‘வா சாமி’ பாடல் வெளியீடு!

Annaatthe: ரஜினிகாந்தின் ‘வா சாமி’ பாடல் வெளியீடு!

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

Annaatthe Release: தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4-ம் தேதி வெளியாகும் ‘அண்ணாத்த’ படத்தைப் பார்க்க ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

  • Share this:
    அண்ணாத்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘வா சாமி’ என்ற பாடல் தற்போது வெளியாகியிருக்கிறது.

    இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் ‘அண்ணாத்த’. இந்தப் படத்தில் அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

    சிவா இயக்கத்தில் வெளியான வீரம், விஸ்வாசம் போன்று கூட்டு குடும்பப் பின்னணியில் அண்ணாத்த தயாராகிறது. அண்ணன் - தங்கை பாசம் படத்தில் பிரதானமாக இருக்கும் என்கிறது படக்குழு. முன்னதாக அண்ணத்த படத்தில் இடம்பெற்றுள்ள, ‘அண்ணாத்த அண்ணாத்த’, ‘சாரல் காற்றே’, ’மருதாணி’ ஆகிய பாடல்களும், படத்தின் டீசரும் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.

    இந்நிலையில் ‘வா சாமி’ என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு தரப்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது இந்தப் பாடல் வெளியாகியிருக்கிறது. பாடலாசிரியர் அருண்பாரதி எழுதியிருக்கும் இந்தப் பாடலை, முகேஷ் முகமது, கீழக்கரை சம்சுதீன், நொச்சிப்பட்டி திருமூர்த்தி ஆகியோர் பாடியுள்ளனர்.





    தவிர, நவம்பர் 1-ம் தேதி முதல் திரையரங்குகள் 100 சதவீத பார்வையாளர்களுடன் செயல்பட தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4-ம் தேதி வெளியாகும் ‘அண்ணாத்த’ படத்தைப் பார்க்க ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: