Rajinikanth: அண்ணாத்த படப்பிடிப்பில் மீண்டும் ரஜினிகாந்த்!

Rajinikanth: அண்ணாத்த படப்பிடிப்பில் மீண்டும் ரஜினிகாந்த்!

ரஜினிகாந்த்

படப்பிடிப்பு கோவை மற்றும் பொள்ளாச்சியில் நடக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பை நடிகர் ரஜினிகாந்த் விரைவில் தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

    இயக்குநர் சிவா இயக்கி வரும் ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் நிறுத்தப்பட்டது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றியிருந்த போதிலும் படக்குழுவில் நான்கு பேருக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டது. இதையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தான் ரஜினிகாந்த் மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்குவார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மார்ச் 15-ம் தேதி முதல் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    முன்னதாக ஜனவரி மாதம் இயக்குனர் சிவா, நடிகர் ரஜினிகாந்தை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். நவம்பர் மாதம் தீபாவளியை முன்னிட்டு படம் வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்ததை அடுத்து, அண்ணாத்த படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவதற்கான திட்டங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். ஈவிபி ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதன் பிறகு படப்பிடிப்பு கோவை மற்றும் பொள்ளாச்சியில் நடக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    'அண்ணாத்த' படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி, ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி இமான் இசையமைத்துள்ள இந்தப் படம் கிராமப்புற கதையை மையமாக வைத்து இயக்கப்பட்டு வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: