• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ’அண்ணாத்த’ மூன்றாவது சிங்கிள் நாளை வெளியீடு!

’அண்ணாத்த’ மூன்றாவது சிங்கிள் நாளை வெளியீடு!

அண்ணாத்த

அண்ணாத்த

மருதாணி எனத் தொடங்கும் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    அண்ணாத்த படத்தில் இடம் பெற்றுள்ள ‘மருதாணி’ பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

    இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் ‘அண்ணாத்த’. இந்தப் படத்தில் அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

    சிவா இயக்கத்தில் வெளியான வீரம், விஸ்வாசம் போன்று கூட்டு குடும்பப் பின்னணியில் அண்ணாத்த தயாராகிறது. அண்ணன் - தங்கை பாசம் படத்தில் பிரதானமாக இருக்கும் என்கிறது படக்குழு. படத்தின் டீசர், முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அண்ணாத்த படத்தின் வேறொரு முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது படக்குழு.



    அதன்படி, மருதாணி எனத் தொடங்கும் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு போஸ்டரில் ஒரு பக்கம் மீனா, மறுபக்கம் குஷ்பு நடுவில் ரஜினிகாந்த் இடம்பெற்றுள்ளனர். தவிர ‘அண்ணாத்த’ படம் தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 4-ம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: