ரஜினி ரசிகர்களுக்கு அண்ணாத்த படக்குழுவினரின் டபுள் ட்ரீட்!

அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 11 மணிக்கும், மோஷன் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கும் வெளியாகும்.

  • Share this:
    ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நாளை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ’தர்பார்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். படத்தை இயக்குநர் சிவா இயக்குகிறார். இதில் நயன்தாரா நாயகியாகவும், கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

    இவர்களுடன் முக்கியக் கதாபாத்திரங்களில் குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், லிவிங்ஸ்டன், ஜார்ஜ் மரியன், சதீஷ், சூரி நடிக்கிறார்கள். அண்ணாத்த படத்தில் வில்லனாக நடிப்பவர் ஜெகபதி பாபு. படத்திற்கு இசை டி.இமான்.

    சிவா இயக்கத்தில் வெளியான வீரம், விஸ்வாசம் போன்று கூட்டு குடும்பப் பின்னணியில் அண்ணாத்த தயாராகிறது. அண்ணன் - தங்கை பாசம் படத்தில் பிரதானமாக இருக்கும் என்கிறது படக்குழு. அண்ணாத்த படத்தில் ஒரு சில பேட்ச் வொர்க்குகள் மீதமுள்ள நிலையில், படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது. அதே நேரத்தில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 11 மணிக்கும், மோஷன் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: