• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நாடி நரம்பு முறுக்க.. அரங்கம் தெறிக்க - மாஸ் காட்டும் அண்ணாத்த மோசன் போஸ்டர்

நாடி நரம்பு முறுக்க.. அரங்கம் தெறிக்க - மாஸ் காட்டும் அண்ணாத்த மோசன் போஸ்டர்

அண்ணாத்த

அண்ணாத்த

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று காலை வெளியான நிலையில், மாஸான மோசன் போஸ்டரை படக்குழு இன்று மாலை வெளியிட்டுள்ளது.

  • Share this:
    தர்பார்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். படத்தை இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா இயக்குகிறார். நயன்தாரா நாயகியாகவும், கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

    இதுமட்டுமல்லாமல்  குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், லிவிங்ஸ்டன், ஜார்ஜ் மரியன், சதீஷ், சூரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.  படத்துக்கு டி. இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், சென்னை, லக்னோ, கொல்கத்தா பகுதிகளில் நடந்து முடிந்தது.

    இயக்குநர் சிவாவின் முந்தைய படங்கங்களான வீரம், விஸ்வாசம் போன்று அண்ணாத்த திரைப்படமும் குடும்பப் பின்னணியில் தயாராகி வருகிறது.நவம்பர் 4 ந்தேதி தீபாவளி அன்று அண்ணாத்த படம் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது முழு வீச்சில் நடந்து வருகின்றன.

    படத்தின்விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியிடப்பட்டது.அதில், ரஜினிகாந்த் வேட்டி சட்டையில் கண்ணாடியுடன் மாஸாக காட்சியளித்தார். இந்நிலையில், மாலை 6 மணிக்கு அண்ணாத்த படத்தின் மோசன் போஸ்டர் வெளியிடப்பட்டது.

    அண்ணாத்த படத்தின் மோசன் ஃபோஸ்டரை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்துவருகின்றனர்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: