ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணையும் மலையாள சூப்பர் ஸ்டார் - வெளியானது மாஸ் அப்டேட்

ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணையும் மலையாள சூப்பர் ஸ்டார் - வெளியானது மாஸ் அப்டேட்

ரஜினிகாந்த் - ஜெயிலர்

ரஜினிகாந்த் - ஜெயிலர்

முன்னதாக ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு டிசம்பர் 12 ஆம் தேதி அன்று ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தின் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் ரஜினிகாந்த்தின் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கலாநிதி மாறன் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் தற்போது நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், வசந்த் ரவி, வினாயகன், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தில் நடிகை தமன்னா ஹீரோயினாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் படக்குழு வெளியிடவில்லை.

முன்னதாக ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு டிசம்பர் 12 ஆம் தேதி அன்று ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தின் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு 65% நிறைவடைந்த நிலையில் பொங்கலுக்குப் பிறகு, மீண்டும் சென்னையில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. ஏப்ரல் மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

வருகிற ஏப்ரல் முதல் வாரத்தில் படத்தின் இசை வெளியீட்டை பிரமாண்டமாக நடத்தத் படக்குழு திட்டமிட்டு வருவதாகவும்அந்த விழாவிலேயே படத்தின் டீசரையும் வெளியிடுகின்றனர் என்றும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் கேமியோ பன்ன உள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு வரும் 8-ம் தேதி நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Also read... ஷகிலா உடன் செல்ஃபி எடுக்க குவிந்த ரசிகர்கள் - உதவிய கஞ்சா கருப்பு!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Mohanlal, Rajinikanth