ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

என்னது! சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அபூர்வ ராகங்கள் முதல் படம் இல்லையா? - வைரலாகும் வீடியோ

என்னது! சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அபூர்வ ராகங்கள் முதல் படம் இல்லையா? - வைரலாகும் வீடியோ

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

அபூர்வ ராகங்களுக்கு முன்பே ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடித்திருக்கிறார் என்ற தகவலை வீடியோவுடன் ரசிகர் ஒருவர் பகிர்ந்திருக்கிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் ரசிகர்கள் மனதில் சூப்பர் ஸ்டாராக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் ரஜினிகாந்த். இன்றளவும் ஒவ்வொருமுறை அவரது பட அறிவிப்பு வெளியாகும்போதும் எதிர்பார்ப்பு உச்சத்தைத் தொடும். தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வரும் அவர் அடுத்ததாக லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 2 படங்களில் நடிக்கவிருக்கிறார். அதில் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சிங் சத்தா படமும் ஒன்று.

கடந்த சில நாட்களுக்கு முன் பத்திரிகையாளர் பிஸ்மி என்பவர், விஜய் தான் சூப்பர் ஸ்டார், ரஜினிகாந்த் முன்னாள் சூப்பர் ஸ்டார் என்று தெரிவிக்க ரசிகர்கள் அவர் வீட்டை முற்றுகையிட்டனர். மேலும் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார், விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்பதை சூர்யவம்சம் படத்தின் வெற்றி விழாவிலேயே தெரிவித்ததாக குறிப்பிட்டிருந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து எப்பொழுதும் ரஜினிகாந்த் தான் சூப்பர் ஸ்டார் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ட்விட்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இருந்துவருகிறது.

இயக்குநர் பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் படத்தில் தான் சிவாஜி ராவ், ரஜினிகாந்த்தாக தமிழக ரசிகர்களுக்கு அறிமுகமானார். துவக்கத்தில் வில்லனாக நடித்த அவர் தனது ஸ்டைலான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். அதுவரை ஹீரோக்களை மட்டுமே கொண்டாடிய தமிழ் சினிமா, ஒரு வில்லன் நடிகர் திரையில் தோன்றியபோது விசிலடித்துக்கொண்டாடியது.

இந்த நிலையில் அபூர்வ ராகங்களுக்கு முன்பே ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடித்திருக்கிறார் என்ற தகவலை வீடியோவுடன் ரசிகர் ஒருவர் பகிர்ந்திருக்கிறார். நடிகராக வாய்ப்பு தேடி அலைந்தபோது மலையாள படமொன்றில் துணை நடிகராக நடித்திருக்கிறார். கடந்த 1974 ஆம் ஆண்டு வெளியான பட்டாபிஷேகம் படத்தில் ஒரு காட்சியின் பின்னணியில் ரஜினிகாந்த் அமர்ந்திருக்கும் காட்சியை தான் ரசிகர் வீடியோவாக பகிர்ந்திருக்கிறார். இதனை மற்ற ரஜினி ரசிகர்கள் ஆர்வமாக பகிர்ந்துவருகின்றனர்.

First published:

Tags: Rajinikanth, Tamil Cinema