ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சரித்திர கதையில் நடிக்கும் ரஜினிகாந்த்...விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!

சரித்திர கதையில் நடிக்கும் ரஜினிகாந்த்...விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!

பி.வாசு -ரஜினிகாந்த்

பி.வாசு -ரஜினிகாந்த்

Rajinikanth P.vasu Movie | ரஜினிகாந்தும் சரித்திர கதையம்சம் கொண்ட படமொன்றில் நடிக்க முடிவு செய்து இயக்குநர் பி.வாசுவிடன் கதை ஒன்றை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சரித்திர பின்னணி கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் தற்போது சரித்திர கதையம்சம் உள்ள படங்கள் சமீபகாலமாக வெற்றி பெற்று வருகிறது. சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் வெற்றியும் தமிழ் சினிமாவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அடுத்து திரைக்கு வர உள்ள பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எறியுள்ளது.

இதனால் மிகப்பெரிய நாயகர்கள் சரித்திர கதையம்சம் கொண்ட படங்களின் மீது கவனம் செலுத்தி வருகின்றனர். சு.வெங்கடேசன் எழுதிய புதினமான வேள்பாரியை தழுவி எடுக்கப்படும் படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது ரஜினிகாந்தும் சரித்திர கதையம்சம் கொண்ட படமொன்றில் நடிக்க முடிவு செய்து இருப்பதாகவும் இந்த படத்தை பி.வாசு இயக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பி.வாசு இயக்கிய சந்திரமுகி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதில் ரஜினிகாந்த் ஒரு கதாபாத்திரத்தில் மன்னனாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் பற்றிய தகவல் ஜெயிலர் படப்பிடிப்பு முடிந்ததும் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

First published:

Tags: Rajinikanth, Tamil cinema news