2020-ம் ஆண்டு பொங்கலை குறிவைக்கும் ரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ் டீம்!

இந்தப் படத்துக்கு நாற்காலி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதற்கு படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மறுப்பு தெரிவித்திருந்தார்.

Web Desk | news18
Updated: March 28, 2019, 8:16 PM IST
2020-ம் ஆண்டு பொங்கலை குறிவைக்கும் ரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ் டீம்!
ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ்
Web Desk | news18
Updated: March 28, 2019, 8:16 PM IST
ரஜினிகாந்த் - ஏ.ஆர். முருகதாஸ் இணையும் புதிய படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பேட்ட படத்தை அடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா ரஜினிக்கு ஜோடியாகிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் 2.0 படத்தைத் தயாரித்த லைகா நிறுவனம் இந்தப் படத்தையும் பிரமாண்டமாக தயாரிக்கிறது.

படத்தின் முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் ஏப்ரல் முதல்வாரத்தில் படத்தின் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளது படக்குழு. மேலும் பொங்கலுக்கு படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்த தகவலை நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த வெற்றி திரையரங்க நிர்வாக இயக்குநர் ராகேஷ் கவுதமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் போது படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Loading...


Watch Also... தமிழிசை பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் - கருணாஸ் ஆவேச பேட்டி

First published: March 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...