அரசியலில் நான் ஜீரோ... ஆனால், ரஜினிகாந்த் பற்றி பேசினால் தட்டிக் கேட்பேன்...! ராகவா லாரன்ஸ்

அரசியலில் நான் ஜீரோ... ஆனால், ரஜினிகாந்த் பற்றி பேசினால் தட்டிக் கேட்பேன்...! ராகவா லாரன்ஸ்
நடிகர் ராகவா லாரன்ஸ்
  • News18 Tamil
  • Last Updated: December 12, 2019, 10:51 AM IST
  • Share this:
ரஜினிகாந்த் பற்றி பேசினால் தட்டிக் கேட்பேன் என்று ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் 70வது பிறந்த நாளையொட்டி சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் ரசிகர்கள் சார்பாக கோமாதா பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இதில் நடிகர் ராகவா லாரன்ஸ், முன்னாள் சென்னை மாநகர துணை மேயர் கராத்தே தியாகராஜன், ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த லாரன்ஸ், இந்தியாவிலேயே நம்பர் ஒன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். யாருக்கும் துரோகம் நினைக்காத மனிதர். எனக்கு அரசியலில் எதுவும் தெரியாது. அரசியலில் நான் ஜீரோ. ஆனால் ரஜினிகாந்த் பற்றி பேசினால் நிச்சயம் தட்டிக் கேட்பேன்.


தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் கத்தி பேசினால் கூட நான் சேனலை மாற்றிவிடுவேன். அப்படியிருக்க ஏன் என்னைத் தாக்குகிறார்கள் என்று எனக்கே தெரியவில்லை” என்று கூறினார்.

படிக்க: ரஜினியுடன் நடிக்க மணிரத்னம் படத்திலிருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்!

சமீபத்தில் நடந்த தர்பார் இசைவெளியீட்டு விழாவில் பேசிய லாரன்ஸ், சீமான் பேச்சு நாட்டுக்கு நல்லதல்ல என்றார். அதைத்தொடர்ந்து அவரது பேச்சுக்கு நாம் தமிழர் கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
First published: December 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்