”தமிழ் படங்களை உலக அளவில் கொண்டு சேர்க்குறதுதான் அவருடைய நோக்கம்”.. மறைந்த இயக்குநருக்கு ரஜினிகாந்த் புகழாரம்...

நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் மகேந்திரன் அவர்களுக்கு ஆடியோ மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

”தமிழ் படங்களை உலக அளவில் கொண்டு சேர்க்குறதுதான் அவருடைய நோக்கம்”.. மறைந்த இயக்குநருக்கு ரஜினிகாந்த் புகழாரம்...
ரஜினிகாந்த்
  • Share this:
ஜூலை 25, 1939 ஆம் ஆண்டு மறைந்த இயக்குநர் மகேந்திரன் அவர்களின் பிறந்தநாள். எனவே அவருடைய நினைவலைகளை நடிகர் ரஜினிகாந்த் ஒரு ஆடியோவாக பகிர்ந்து கொண்டார். இந்த ஆடியோ பதிவை இயக்குநரின் மகன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த ஆடியோவில் கூறியிருப்பதாவது, “முள்ளும் மலரும் படத்தில் என் நடிப்பை பற்றி புகழ்ந்து ஜனங்கள் பேசினாங்க அதற்கு முழு காரணம் மகேந்திரன் சார் அவர்கள்தான். இயக்குனர் மகேந்திரன் அவர்கள் எனக்கு மிக மிக நெருங்கிய நண்பர் ரொம்ப வித்தியாசமான மனிதர்.

இயக்குனர் மகேந்திரன் அவர்களைப் பொறுத்தவரை பணம் புகழ், பெயர் இது போன்று எப்போதும் அவர் பேசியதும் இல்லை அதற்கு முக்கியத்துவம் கொடுத்ததும் கிடையாது.


தரமான படங்கள் கொடுக்கணும். தமிழ் படங்களை உலக அளவிற்கு கொண்டு செல்ல வேண்டும். வித்தியாசமாக இருக்கணும் அப்படி என்பது மட்டும்தான் அவரது ஒரே நோக்கம்.

உதிரிப்பூக்கள் படம் பார்த்தேன. படம் முடிந்த பிறகு எனக்கு தெரியாமல் எழுந்து கை தட்டி விட்டேன்.அதன் பிறகு ஒரு பத்து நிமிடம் என் கண்களில் கண்ணீர் வந்தது. அப்பொழுது நினைத்தேன் எவ்வளவு சீக்கிரமாக நம்மை விட்டு சென்றுவிட்டார் என்று என்னுடைய நல்ல பாக்கியம் சமீபத்தில் பேட்டை படத்தில் அவருடன் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.

மேலும் படிக்க...

அனுமதியின்றி கொடைக்கானலுக்கு சென்ற நடிகர் சூரி மற்றும் விமல் - E-Pass வழங்கியது யார்? நடவடிக்கை பாயுமா?

காசியில் திரைப்பட படப்பிடிப்பின் போது இருவரும் ஒன்றாக இருந்ததும்  மறக்க முடியாத தருணம். இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டு பிரிவார் என்று நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. ஒரு நல்ல ஆத்மா நம்மை விட்டு சென்றுள்ளது இது இரண்டாவது வருடம் இந்த நாளில் அவரை நினைத்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என  நடிகர் ரஜினிகாந்த் அந்த ஆடியோவில் தெரிவித்திருந்தார்.
First published: July 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading