சினிமாவில் ரஜினியும், விஜய்யும்தான் தனக்கு ரோல் மாடல் என்று அறிமுக நடிகர் லெஜண்ட் சரவணன் கூறியுள்ளார். இதனால் ரஜினி, விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன் முறையாக மிகுந்த பொருட்செலவில் மிக பிரமாண்டமான முறையில் பன்மொழி பான் இந்தியா படம் ஒன்றை தயாரித்து வருகின்றனர். 'தி லெஜன்ட்' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் கதாநாயகனாக லெஜண்ட் சரவணன் நடிக்கிறார்.
'தி லெஜண்ட்’ படத்தின் கதை திரைக்கதையை எழுதி இயக்குகிறார்கள் ஜேடி-ஜெர்ரி. இளமை ததும்பும் இசையை ஹாரிஸ் ஜெயராஜ் வழங்கியுள்ளார். இப்படத்தின் முதல் லிரிக்கல் பாடல் ’மொசலோ மொசலு’-வை பிரபல இயக்குநர்கள் மணிரத்னம், ராஜமெளலி மற்றும் சுகுமார் வெளியிட்ட நிலையில், ஒரு கோடிக்கும் அதிகமான பார்வைகள் மற்றும் பாராட்டுகளை பாடல் கடந்து மாநகரம் முதல் கிராமம் வரை ஹிட் அடித்துள்ளது. பா விஜய் பாடல் வரிகளை இயற்ற, அர்மான் மாலிக் இந்த பாடலை பாடியுள்ளார்.
இதையும் படிங்க - ‘லாஸ்லியா லீக்ஸ்’ ஹேக் ஆன அக்கவுண்டிலிருந்து வெளிவந்த போட்டோஸ்.. அதிர்ச்சியான லாஸ்லியா
ராஜு சுந்தரம் நடனம் அமைத்துள்ள ‘மொசலோ மொசலு’ பாடலில் பிக் பாஸ் பிரபலம் யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோருடன் தோன்றும் லெஜண்ட் சரவணன், தனது நடன அசைவுகளால் அனைவரையும் கவர்ந்துள்ளார்.
தி லெஜண்ட் ட்ரெய்லரைப் பார்க்க..
அதைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாடலான பென்னி தயாள் மற்றும் ஜொனிதா காந்தி பாடி கவிஞர் சினேகன் எழுதிய 'வாடி வாசல்' சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் ஒரு கோடி பார்வைகளை கடந்து வெகுவாக ரசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தி லெஜண்ட் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் லான்ச் நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இதையும் படிங்க - என்னா ஸ்டைலா இருக்காங்கப்பா! அமலா பாலின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..
அப்போது செய்தியாளர்களை சந்தித்த லெஜண்ட் சரவணன், சினிமாவில் தனக்கு ரஜினியும், விஜய்யும்தான் ரோல் மாடல் என்று தெரிவித்தார். இவ்வளவு பிரமாண்டம் எதற்காக என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, எல்லாம் வெற்றிக்காகத்தான் என்று அவர் பதில் அளித்தார்.
தி லெஜண்ட் படத்தை தொடர்ந்து, அடுத்தடுத்த படங்களிலும் சரவணன் நடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.