துக்ளக் விழாவில் சர்ச்சைப் பேச்சு: ரஜினி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதிலளிக்க உத்தரவு!

துக்ளக் விழாவில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில் ரஜினி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

துக்ளக் விழாவில் சர்ச்சைப் பேச்சு: ரஜினி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதிலளிக்க உத்தரவு!
ரஜினிகாந்த்
  • Share this:
துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது அளிக்கப்பட்ட புகார் குறித்து காவல் ஆணையர் பதிலளிக்குமாறு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜனவரி 14-ஆம் தேதி துக்ளக் ஆண்டு விழாவில் பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசிய கருத்துக்கள் சர்ச்சைக்குள்ளானது. இதையடுத்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் 18-ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இதுவரை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதனால் சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் திராவிடர் விடுதலைக் கழக மாவட்டச் செயலாளர் உமாபதி சார்பில் 2-வது முறையாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


ரஜினி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்க எடுக்கவேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.வழக்கு விசாரணை வரும் 7-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல் ஆணையர் விளக்கம் அளிக்க வேண்டுமென நீதிபதி கூறியதாக வழக்கறிஞர் துரை அருண் தெரிவித்துள்ளார்.

Also see...
First published: March 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading