ரஜினியின் ஜெயிலர் டைட்டில் அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ள விஜய் ரசிகர்களால் பீஸ்ட் இயக்குனர் நெல்சன் கிண்டலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தளபதி விஜய்யை இயக்கும் வாய்ப்பு நெல்சன் திலீப் குமாருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு பீஸ்ட் என்று பெயர் வைத்திருந்தார்கள். பாடல் மற்றும் விளம்பர உத்திகளை சிறப்பாக கையாண்ட நெல்சன், பீஸ்ட் வெளிவருதற்கு முன்பாகவே மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தார்.
குறிப்பாக சிவகார்த்திகேயன், அனிருத்துடன் இணைந்து அவர் உருவாக்கி அரபிக் குத்து பாடல் உலக அளவில் ஹிட்டானது. ஆனால், படம் வெளியான பின்னர் விஜய் ரசிகர்களைக் கூட பீஸ்ட் திருப்திபடுத்தவில்லை.
இதையும் படிங்க - தமிழ் சினிமாவில் தலைவிரித்தாடும் வன்முறை காட்சிகள்!
இந்நிலையில் நெல்சன் அடுத்ததாக ரஜினியை வைத்து படம் இயக்கவுள்ளார். யாரும் எதிர்பார்க்காத நிலையில் இந்த படத்திற்கு ஜெயிலர் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி போஸ்டரும் வெளியிடப்பட்டது.
#Thalaivar169 is #Jailer@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/tEtqJrvE1c
— Sun Pictures (@sunpictures) June 17, 2022
தற்போது இந்த போஸ்டர் காப்பி அடிக்கப்பட்டதாக விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஜெயிலர் போஸ்டரில் கத்தி ஒன்று தொங்க விடப்பட்டு அதில் ரத்தம் வழிந்து கொண்டிருக்கும். அதன் பின்னால் உள்ள கட்டித்தை பார்த்தால் ஜெயிலைப் போன்ற தோற்றம் உடையதாக முதலில் தோன்றும்.
ஆனால் இந்த படத்தை belgium steel mill என்று கூகுளில் டைப் செய்தாலே, பார்க்கலாம் என்று கூறும் விஜய் ரசிகர்கள் சிலர், அதற்காக ஸ்க்ரீன் ஷாட்டையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்கள்.
Google la Belgium Steel mill Pic eduthu , oru kaththi soruvi Title vittu irukkaan 🤣🤣🤣 #Jailer #Rajini pic.twitter.com/yb7azMwQhi
— TʜʀɪʟʟᴇR ツ (@Itz_Thriller) June 17, 2022
இதனால் நெல்சன் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்யப்பட்டு வருகிறார்.
#BeastSecondLook pic.twitter.com/L3yEgAXuX5
— Vijay (@actorvijay) June 21, 2021
முன்னதாக விஜய்யின் பீஸ்ட் படத்தின் டைட்டில் அறிவிப்பு போஸ்டரின்போது நெல்சனுக்கு பாராட்டுகள் குவிந்தன. இதற்காக விஜய்யை வைத்து ஃபோட்டோ ஷூட் நடத்தப்பட்டு டைட்டில் அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க - இது தான் நேர்மை! விக்ரம் வசூலை அறிவித்த உதயநிதியை மேடையில் பாராட்டிய கமல்
இந்நிலையில் பீஸ்ட்டின் டைட்டில் அறிவிப்புக்காக இவ்வளவு மெனக்கெட்ட நெல்சன் கூகுள் ஃபோட்டோ, பட்டாக்கத்தியை வைத்து டைட்டிலை அறிவித்து விட்டாரே என்று ரசிகர்கள் ட்ரால் செய்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Nelson dilipkumar