முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஆகஸ்டில் தொடங்குகிறது ரஜினியின் ‘ஜெயிலர்’ ஷூட்டிங்… படத்தின் கதை குறித்து புதிய தகவல்

ஆகஸ்டில் தொடங்குகிறது ரஜினியின் ‘ஜெயிலர்’ ஷூட்டிங்… படத்தின் கதை குறித்து புதிய தகவல்

நெல்சன் - ரஜினிகாந்த்

நெல்சன் - ரஜினிகாந்த்

Rajini Jailer Movie : ஜெயிலர் படத்தில் ஒட்டு மொத்த கதையும் ஜெயிலுக்குள் முடியுமா அல்லது பிரமாண்டமாக அமையுமா என்பது நெல்சனுக்கு மட்டுமே தெரியும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட்  மாதத்தில் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  படத்தின் கதை குறித்து புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

அண்ணாத்த படம் ஓரளவு வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் திலீப் குமாருடன் இணைந்து படம் பண்ணுகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த படத்திற்கு ஜெயிலர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

பீஸ்ட் படம் சறுக்கியதால்  ஜெயிலர் படத்தை சிறப்பாக கொண்டு வர வேண்டும் என்ற முடிவில் உறுதியாக உள்ள இயக்குனர் நெல்சன், படத்தின் கதை மற்றும் திரைக்கதையை வடிவமைத்து வருகிறார்.

கன்னடத்தில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் சிவராஜ் குமார் ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் இணையவுள்ளார். இந்த படத்தில் நடிக்குமாறு ஐஷ்வர்யா ராயை  படக்குழுவினர் அணுகியுள்ளனர். இருப்பினும் அவர் இடம்பெறுவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இதையும் படிங்க - நடிகர் விஜய் பிறந்த நாளையொட்டி சமூக வலைதளங்களில் CDP வெளியீடு…

இதேபோன்று டாக்டர், எதற்கும் துணிந்தவன் வெற்றிப் படங்களில் நடித்த பிரியங்கா மோகன் ஜெயிலர் படத்தில் இடம் பெறுகிறார். அனிருத் இசையமைப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வரை படத்தில் இடம்பெறும் நடிகர், நடிகைகள் அனைவரும் உறுதி செய்யப்படவில்லை.

இதையும் படிங்க -  தெலுங்கு முன்னணி நடிகரை இயக்கப் போகும் வெற்றிமாறன்… விரைவில் வெளியாகும் அறிவிப்பு

இதற்கிடையே ஜெயிலர் படத்தின் கதை குறித்து சில தகவல்கள் வெளிவந்துள்ளன. அனுபவம் மிக்க சிறை வார்டனாக ரஜினியின் கேரக்டர் இடம் பெறும் என்றும், அவர் கண்காணிக்கும் சிறையில் இருந்து பயங்கர குற்றவாளிகள் தப்பித்து செல்ல முயற்சிப்பதும், அவர்களை ரஜினி தடுத்து நிறுத்துவதும்தான் படத்தின் கதையாக இருக்கக் கூடும் என யூகிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பீஸ்ட் படம் தங்க கடத்தல் தொடர்பான பிரமாண்ட கதை என்று பேசப்பட்ட நிலையில், அதனை பிணைக் கைதிகள் கதையாக வடிவமைத்து ஒரு மாலுக்குள் படத்தை நெல்சன் முடித்திருந்தார்.

ஜெயிலர் படத்தில் ஒட்டு மொத்த கதையும் ஜெயிலுக்குள் முடியுமா அல்லது பிரமாண்டமாக  அமையுமா என்பது நெல்சனுக்கு மட்டுமே தெரியும்.

First published:

Tags: Nelson dilipkumar, Rajinikanth