ரஜினி கட்அவுட்டிற்கு ஆட்டை பலி கொடுத்து ரத்தாபிஷேகம் - ரசிகர்கள் மீது புகார்

ரஜினி கட்அவுட்

ரஜினி கட்அவுட்டிற்கு ஆட்டை பலி கொடுத்து ரத்தாபிஷேகம் செய்த ரசிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளனர்.

  • Share this:
    ரஜினிகாந்த் தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். படத்தை இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா இயக்குகிறார். நயன்தாரா நாயகியாகவும், கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.  இதுமட்டுமல்லாமல்  குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், லிவிங்ஸ்டன், ஜார்ஜ் மரியன், சதீஷ், சூரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.  படத்துக்கு டி. இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், சென்னை, லக்னோ, கொல்கத்தா பகுதிகளில் நடந்து முடிந்தது.

    இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அண்ணாத்த படத்தின் மோசன் ஃபோஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோசன் ஃபோஸ்டரை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனிடையே அண்ணாத்த படத்தின் கட்அவுட்டிற்கு ரசிகர்கள் ஆடுவெட்டி ரத்தாபிஷேகம் செய்த காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது. இதற்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Also Read : பிரபல சீரியல் நடிகர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

    இது தொடர்பாக பால் முகவர்கள் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் ரஜினிகாந்த்  நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்திற்கு பொதுவெளியில் வைக்கப்பட்டுள்ள கட்அவுட்டிற்கு பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் முன்னிலையில் ஆட்டை பலி கொடுத்து அவரது ரசிகர்கள் ரத்தாபிஷேகம் செய்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தது போய் தற்போது ஆட்டை பலி கொடுத்து ரத்தாபிஷேகம் செய்கிற நடிகர் ரஜினிகாந்த ரசிகர்களின் காட்டுமிராண்டித்தனத்தை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது என்றுள்ளனர்.

    நடிகர் ரஜினிகாந்த அவர்களின் அண்ணாத்த கட்அவுட்டிற்கு ஆட்டை பலி கொடுத்து ரத்தாபிஷேகம் செய்த சம்பந்தப்பட்ட ரசிகர்கள் மீது தமிழக காவல்துறை உடனடியாக வழக்குப்பதிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது .

    Also Read : விஜய் டிவி வடிவேல் பாலாஜியின் நினைவு தினம்...கல்லறைக்கு சென்ற சிரிச்சா போச்சி குழு

    ஏற்கனவே கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்கிற கலாச்சாரத்தை தடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் ரஜினிகாந்த் அவர்களுக்கு நேரிலும், பதிவு தபால் மூலமும் பலமுறை கோரிக்கை முன் வைத்தும் தனது ரசிகர்களை கண்டித்து நல்வழிப்படுத்த தவறிய அவர் இவ்விகாரத்திலாவது உடனடியாக விழித்துக் கொள்ள வேண்டும். தவறான கலாச்சாரம் தமிழகத்தில் அரங்கேற அவர் காரணமாக இருக்க கூடாது என திரு. ரஜினிகாந்த் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கேட்டுக் கொள்கிறது என்றுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published: