• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Rajinikanth: இதுவரை நடிகர் ரஜினிகாந்த் பெற்ற விருதுகள்!

Rajinikanth: இதுவரை நடிகர் ரஜினிகாந்த் பெற்ற விருதுகள்!

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

திரைத்துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருதை இதற்கு முன்பு தமிழ் திரையுலகம் சார்பில் சிவாஜி கணேசன் மற்றும் கே.பாலச்சந்தர் ஆகியோர் மட்டுமே பெற்றுள்ளனர்.

  • Share this:
    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு டெல்லியில் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படும் நிலையில் அவர் இதுவரை பெற்ற உயரிய விருதுகள் குறித்த ஒரு தொகுப்பை இங்கே பதிவிடுகிறோம்.

    ரஜினி.. இந்த மூன்றெழுத்துக்கு ரசிகர்களிடம் இருக்கும் வசீகரம், காலம் கடந்து இன்றும் துளியும் குறையவில்லை. ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருங்கிக்கிடந்த தமிழ் சினிமாவின் வணிக எல்லையை, உலகளவில் விரிவுபடுத்தியதில் ரஜினி படங்களுக்கு பெரும்பங்குண்டு. குறிப்பாக கருப்பு வெள்ளை காலத்தில் களம் கண்ட ரஜினி, ஈஸ்ட்மென் கலர், டிஜிட்டல், அனிமேஷன், 3டி என நான்கு வெவ்வேறு தொழில்நுட்பத்தில் நடித்துவிட்டார். இது இந்திய அளவில் வேறெந்த நடிகருக்கும் கிடைக்காத மிகப்பெரிய கௌரவம் ஆகும்.

    ஒரு பக்கம் வசூல் சாதனைகள் என்றால் இன்னொரு பக்கம் கலைமாமணி தொடங்கி பத்மவிபூஷன் வரை எண்ணற்ற உயரிய விருதுகளையும் ரஜினிகாந்த் கைப்பற்றியுள்ளார். 1978-ல் முதல்முறையாக ’முள்ளும் மலரும்’ படத்திற்காக தமிழக அரசின் சிறப்பு விருதை பெற்ற ரஜினிகாந்த், தொடர்ந்து ’மூன்று முகம்’, ’முத்து’, ’படையப்பா’, ’சந்திரமுகி’, ’சிவாஜி’ என 6 முறை தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார்.

    தமிழக அரசின் விருதுகள்

    1978 - முள்ளும் மலரும்

    1982 - மூன்று முகம்

    1995 - முத்து

    1999 - படையப்பா

    2005 - சந்திரமுகி

    2007 - சிவாஜி



    2000-ம் ஆண்டு ரஜினிகாந்திற்கு ’பத்ம பூஷன்’ விருது வழங்கி கவுரவித்தது அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு. 2016-ம் ஆண்டு மோடி அரசு இவருக்கு இந்தியாவின் 2-வது மிகப்பெரிய விருதான பத்ம விபூஷன் வழங்கி கவுரவித்தது. இதே ஆண்டில் ஆந்திர அரசின் வாழ்நாள் சாதனையாளருக்கான நந்தி விருதையும் இவர் பெற்றார்.

    பத்ம & நந்தி விருதுகள்

    2000 - பத்ம பூஷன்

    2016 - பத்ம விபூஷன்

    2016 - நந்தி விருது



    இவை தவிர்த்து 2007-ம் ஆண்டில் இந்தியாவின் தலைசிறந்த பொழுதுபோக்கு நடிகர், 2011-ல் ஸ்டைலிஷ் நடிகர் மற்றும் கடந்த தசாப்தத்தின் சிறந்த பொழுதுபோக்கு நடிகர், 2013-ல் 25 வாழும் பிரபலங்களில் ஒருவர் என ரஜினிக்கு நான்கு முறை விருது வழங்கி கவுரவித்திருக்கிறது NDTV.

    என்.டி.டி.வி. விருதுகள்

    2007 - இந்தியாவின் தலைசிறந்த பொழுதுபோக்கு நடிகர்

    2011 - கடந்த தசாப்தத்தின் தலைசிறந்த பொழுதுபோக்கு நடிகர்

    2011 - ஸ்டைலிஸ் நடிகர்

    2013 - வாழும் 25 பிரபலங்களில் ஒருவர்



    மேலும் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் 2014-ம் ஆண்டு Indian film personality விருது பெற்ற ரஜினி, 2019-ல் அதே கோவா சர்வதேச திரைப்பட விழாவின் பொன்விழா ஆண்டில் ICON OF GOLDEN JUBILEE எனும் சிறப்பு விருதையும் பெற்று அசத்தினார்.

    இப்படி பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ள ரஜினியின் மணி மகுடத்தில் மற்றொரு வைரக்கல்லாக, தற்போது தாதே சாகேப் பால்கே விருதும் அவருக்கு வழங்கப்பட உள்ளது.



    திரைத்துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருதை இதற்கு முன்பு தமிழ் திரையுலகம் சார்பில் 1996-ம் ஆண்டு சிவாஜி கணேசன் மற்றும் 2010-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் ஆகியோர் மட்டுமே பெற்றுள்ளனர். அந்த வரிசையில் தற்போது ரஜினிகாந்தும் இணைந்திருப்பது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: