தலைமுறைகள் கடந்து இன்றும் திரையில் தோட்டாவாய் தெறித்து கொண்டிருப்பவர்கள் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும். இந்த இரட்டை குழல் துப்பாக்கியைப் பற்றிய ஒரு தொகுப்பு.
தமிழ் சினிமாவின் 40 ஆண்டு கால இரட்டைகுழல் துப்பாக்கி ரஜினிகாந்தும் கமல்ஹாசனும். நூற்றாண்டு கால தமிழ் சினிமாவின் அறுபதாண்டு கால பொக்கிஷம் கமல்ஹாசன். 6 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 60 ஆண்டுகளை சினிமாத்துறைக்காக அர்ப்பணித்து கொண்டிருக்கும் நாயகன்தான் கமல்ஹாசன். இப்படி கமல் ஆறிலிருந்து அறுபது வரை தமிழ் சினிமாவில் பங்கெடுத்து கொண்டிருக்க அபூர்வராகங்களில் அறிமுகமாகி ’ஆறிலிருந்து அறுபது வரை’ திரைப்படத்தில் சிறந்த நடிகனாக ஜொலித்து தனக்கேயுரிய ஸ்டைல் நடிப்பினால் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் கமல்ஹாசன் தலைமுறைக்கு பின் பல இளம் கதாநாயகர்கள் வெள்ளித்திரையில் முளைத்தனர். அதில் பலர் மின்னலாய் மறைந்தும் போயினர். ஆனால் இன்றும் வெள்ளித்திரையின் வசூல் ராஜாக்களாய். இளம் இயக்குனர்களின் கனவு ஹீரோக்களாய் ரஜினிகாந்தும் கமல்ஹாசனுன் இருந்து வருவதை பார்க்கலாம். கபாலி, பேட்ட, அண்ணாத்த போன்ற திரைப்படங்களில் நடித்து ஆச்சரியப் படுத்தினார் ரஜினிகாந்த்.
முன்னணி சினிமா நாயகர்களான இவர்களிருவரின் உண்மையான வயதிற்கும் அவர்கள் ஏற்கும் பாத்திரங்களின் வயதிற்கும் பல சமயங்களில் தொடர்பே இல்லாமல் இருந்தாலும் அதை ஒரு பொருட்டாக பார்க்காமல் அவர்களிருவரையும் இன்று வரை உச்சத்தில் வைத்திருக்கிறது தமிழ் சினிமா. 60 வருடங்களுக்கு முன்பு ’அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ என பாடிய சிறுவன் கமல்ஹாசன் இன்றும் உலக நாயகனாக வலம் வந்து கொண்டிருப்பதை பார்க்கலாம்.
விஜய் நடிப்பில் வந்த ’மாஸ்டர்’ திரைப்படத்தை இயக்கி முன்னணி இயக்குனரானவர் லோகேஷ் கனகராஜ். கைதியில் கார்த்தி, மாஸ்டரில் விஜய் என கடந்து தனது மனம் கவர்ந்த கமல்ஹாசனையும் இயக்கினார்.
Also read... உலகத்தில் முதலாவதாக தமிழன் எதையும் செய்யக்கூடாது என்று தமிழனே நினைக்கிறான் - பார்த்திபன்
லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ‘விக்ரம்’ திரைப்படத்தில் நாயகனாக தோட்டாக்களை தெறிக்கவிட்டு இன்றும் என்றும் சகலகலா வல்லவன் ஆனார் கமல்ஹாசன்.
கமல்ஹாசனுக்கு ஒரு லோகேஷ் கனகராஜை போல் ரஜினிகாந்துக்கு தற்போது அமைந்துள்ளார் இயக்குனர் நெல்சன். சிவ கார்த்திகேயனின் டாக்டர், விஜய்யின் பீஸ்ட், திரைப்படங்களை இயக்கிய நெல்சனின் இலக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீதானது. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பார்வை வெளிவந்து வெறித்தனமாக வைரலாகி தமிழ் சினிமாவின் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.