ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

எஸ்.பி.முத்துராமன் யூனிட்டுக்காக சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்த ரஜினி

எஸ்.பி.முத்துராமன் யூனிட்டுக்காக சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்த ரஜினி

இயக்குனர் 
எஸ்.பி.முத்துராமன்
உடன் ரஜினி

இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் உடன் ரஜினி

S. P. Muthuraman | பல பிளாக் பஸ்டர் ஹிட்டுகளை கொடுத்த ரஜினி - எஸ்.பி.எம். கூட்டணி பாண்டியன் என்ற சுமார் வெற்றியுடன் முடிவுக்கு வந்தது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

1992 தீபாவளிக்கு ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், பாக்யராஜ் நடித்தப் படங்கள் மோதின. அபூர்வமாக ரஜினி படத்தை முந்திக் கொண்டு கமலின் தேவர் மகன் பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தைப் பிடித்தது. ரஜினி நடிப்பில் வெளிவந்த படம் பாண்டியன். மிஸ்டர் ரைட் என்று ரஜினி ரசிகர்கள் டி ஷர்ட்டில் ரைட் சிம்பலுடன் அப்போது இருந்தனர்.

ரஜினியை வைத்து 26 திரைப்படங்கள் இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். அதிகமும் ஹிட் படங்கள். ஏவிஎம் பேனரில் ரஜினி நடித்த முதல் படம் முரட்டுக்காளை தொடங்கி 1989 இல் வெளியான ராஜா சின்ன ரோஜாவரை அனைத்துப் படங்களையும் எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். ரஜினி - ஏவிஎம் - எஸ்.பி.முத்துராமன் என்பது அப்போதைய வெற்றி காம்போ.

முத்துராமனின் படங்களில் தொடர்ச்சியாக பணியாற்றி வந்தவர்களுக்காக ரஜினி ஒரு படம் நடித்துத் தருவதாக இருந்தது.

அந்தப் படம்தான் பாண்டியன். ரஜினி இதற்காக சம்பளம் எதுவும் வாங்கவில்லை. கன்னடத்தில் டைகர் பிரபாகர் நடித்த பாம்பே தாதா படத்தின் உரிமையை வாங்கி தமிழில் ரீமேக் செய்தனர். முதலில் படத்துக்கு நண்பன் என்று பெயர் வைத்திருந்தனர். பிறகு பாண்டியன் என மாற்றினர்.

ரஜினி இதில் அண்டர் கவர் காப்பாக வருவார். அவரது சகோதரியாக ஜெயசுதா நடித்தார். நாயகி குஷ்பு.

பாண்டியனின் ராஜ்யத்தில் உய்யாலாலா பாடலை கார்த்திக் ராஜா கம்போஸ் செய்தார். இதுதான் அவர் தனியாக கம்போஸ் செய்த முதல் பாடல். பாண்டியனா கொக்கா கொக்கா..., அன்பே நீ என்ன..., உலகத்துக்காக பிறந்தவன் நானே... என அனைத்துப் பாடல்களும் அன்று ஹிட்டாயின.

எனினும் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தட்டுத் தடுமாறி 100 நாள்கள் ஓடியது. படத்தின் லாபத்தை இரண்டு பங்காக பிரித்து, ஒரு பங்கு முத்துராமனுக்கும், மீதியை அவரது யூனிட்டில் உள்ள 14 பேருக்கும் பகிர்ந்து அளிப்பது என முடிவானது. அதனை முத்துராமன் ஏற்கவில்லை. நானும் அவர்களில் ஒருவன் என பதினைந்து பங்காகப் பிரித்து, மற்றவர்களைப் போல ஒரு பங்கை மட்டும் எடுத்துக் கொண்டார்.

தொழிலாளர்களுக்காக நடித்துக் கொடுத்த படம் சுமாராகப் போனது ஒரு சோகம் என்றால், படம் வெளியாவதற்கு பத்து தினங்கள் முன்பு முத்துராமனின் மனைவி இறந்தது பேரிடியாக அமைந்தது. பட வெளியீட்டை தள்ளிப் போடலாம் என்றதை ஏற்காமல் முத்துராமன் அந்த சோகமான சூழலிலும் வேலைகளை முடித்து படத்தை வெளியிட்டார். அதன் பிறகு அவர் ஒரேயொரு படம் மட்டுமே இயக்கினார். முற்றிலுமாக இயக்கத்திலிருந்து தன்னை துண்டித்துக் கொண்டார்.

Read More: ’என் பிரின்சஸ் பிறந்தநாள்’.. க்யூட்டான படத்தை பகிர்ந்த ‘பிரின்ஸ்’ சிவகார்த்திகேயன்

அந்த வருடம் தேவர் மகன் பிளாக்பஸ்டர் ஹிட்டாக, அடுத்த இடத்தை சொந்தமிழ்ப் பாட்டு பிடித்தது. சத்யராஜின் திருமதி பழனிச்சாமி ஓரளவு ஓட, பாக்யராஜின் ராசுக்குட்டி தட்டுத்தடுமாறியது. பல பிளாக் பஸ்டர் ஹிட்டுகளை கொடுத்த ரஜினி - எஸ்.பி.எம். கூட்டணி பாண்டியன் என்ற சுமார் வெற்றியுடன் முடிவுக்கு வந்தது ஒருவகையில் ஏமாற்றமே.

Published by:Srilekha A
First published:

Tags: Actor sathyaraj, Director Bhagyaraj, Kamal Haasan, Rajinikanth