நடிகர் சங்க தேர்தலில் மறைமுகமாக மோதும் ரஜனி - கமல்?

அரசியல் களத்தில் சந்திக்கவுள்ளவர்களாக கருதப்படும் ரஜினி, கமலுக்கு, இது ஒரு முன்னோட்டமாக இருக்கும் என சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Web Desk | news18india
Updated: June 12, 2019, 9:59 PM IST
நடிகர் சங்க தேர்தலில் மறைமுகமாக மோதும் ரஜனி - கமல்?
அரசியல் களத்தில் சந்திக்கவுள்ளவர்களாக கருதப்படும் ரஜினி, கமலுக்கு, இது ஒரு முன்னோட்டமாக இருக்கும் என சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
Web Desk | news18india
Updated: June 12, 2019, 9:59 PM IST
ரஜினிகாந்த், கமல்ஹாசன் மறைமுகமாக மோதிக்கொள்ளும் முதல் தேர்தலாக இந்த நடிகர் சங்கத் தேர்தல் பார்க்கப்படுகிறது. 

தமிழ் சினிமாவின் இருபெரும் ஆளுமைகளாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் விளங்கி வருகின்றனர். நடிகர்கள் மத்தியில் மிகுந்த மரியாதையுடன் பார்க்கப்படும் ரஜினி, கமலின் ஆதரவைப் பெறுவதில் நடிகர் சங்கத் தேர்தலில் எப்போதுமே போட்டி நிலவும்.

கடந்த நடிகர் சங்கத் தேர்தலின்போது கமல்ஹாசன் தனது ஆதரவை பகிரங்கமாக விஷாலின் பாண்டவர் அணிக்கு வழங்கினார். அந்தத் தேர்தலில் விஷால் அணி வெற்றியும் பெற்றது. இந்தச் சூழலில் கமல் ஆதரவுடன் விஷால் அணி மீண்டும் போட்டியிடுவதாக கூறப்படுகிறது.

விஷாலுக்கு எதிராக போட்டியிடும் பாக்கியராஜின் சுவாமி சங்கரதாஸ் அணிக்கு ரஜினிகாந்த் ஆதரவு அளித்துள்ளதாக பாக்யராஜ் சூசகமாக கூறினார். தாங்கள் பொறுப்பேற்றால் நன்றாக இருக்கும் என நம்பிக்கை இருப்பதாக ரஜினி கூறியதாக பாக்யராஜ் பேட்டியளித்தார்.

இதனிடையே, காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், நடிகர் சங்கத் தேர்தலில் ரஜினியும், கமலும் எதிர் எதிர் துருவங்களாக உள்ளார்கள் என்று வெளியாகும் தகவல் வதந்தி என்றும், யாருக்கு ஆதரவு என அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகும் வரை இதை யாரும் நம்பவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

நேரடியாக ஆதரவு அளிக்காவிட்டாலும் ரஜினியின் ஆதரவு பாக்யராஜ் அணிக்கு இருப்பதாக கருதப்படுகிறது. கமல், ரஜினியின் ஆதரவு பெற்ற இரு அணிகள் நடிகர் சங்கத் தேர்தலில் களமிறங்குவதால், இது அவர்கள் இருவருக்கு இடையேயான போட்டியாக பார்க்கப்படுகிறது.

அரசியல் களத்தில் சந்திக்கவுள்ளவர்களாக கருதப்படும் ரஜினி, கமலுக்கு, இது ஒரு முன்னோட்டமாக இருக்கும் என சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ரஜினி கமல் இரண்டு பேரில் வெல்லப்போவது யார் என்பதை 24-ம் தேதி வரை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
Loading...
Also Watch : நடிகர் சங்கத்தேர்தல் என்னுடைய பாசையில் ஆட்டுப் புழுக்கை தேர்தல் - ராதாரவி

First published: June 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...