ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாக இருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்தார்.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் சஞ்சு சாம்சனை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார் ரஜினி. இணையத்தில் அவருடன் தான் இருக்கும் படத்தைப் பகிர்ந்த சஞ்சு சாம்சன், "7 வயதில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகனாக, ஒரு நாள் ரஜினி சாரை அவரது வீட்டிற்குச் சென்று சந்திப்பேன் என என் பெற்றோரிடம் சொல்லியிருந்தேன். 21 வருடங்களுக்குப் பிறகு, தலைவர் என்னை அவர் வீட்டிற்கு அழைத்தபோது அது நிஜமாகியிருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
மார்ச் 31 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் 2023-க்கு தயாராகி வருகிறார் சஞ்சு சாம்சன். மறுபுறம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார்.
At the age of 7 already being a Super Rajni fan,,I told my parents ..See one day I will go and meet Rajni sir in his house…
After 21 years,that day has come when The Thalaivar invited me..☺️🙏🏽 pic.twitter.com/FzuWWqJkif
— Sanju Samson (@IamSanjuSamson) March 12, 2023
தமன்னா கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில், மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், சுனில், வசந்த் ரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளனர். அதோடு ஜெயிலரில் முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rajinikanth