ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஆஸ்கருக்கு நிகரான விருதின் தேர்வு பட்டியலில் 'ஆர்ஆர்ஆர்' - உற்சாகத்தில் ரசிகர்கள்

ஆஸ்கருக்கு நிகரான விருதின் தேர்வு பட்டியலில் 'ஆர்ஆர்ஆர்' - உற்சாகத்தில் ரசிகர்கள்

ஆர்ஆர்ஆர் படத்திலிருந்து ராம் சரண் மற்றும் ஜுனியர் என்டிஆர்

ஆர்ஆர்ஆர் படத்திலிருந்து ராம் சரண் மற்றும் ஜுனியர் என்டிஆர்

பிரபல ஹாலிவுட் இணையதளமான வெரைட்டி வெளியிட்டுள்ள சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் கணிப்பு பட்டியலில் இந்தியா சார்பில் நடிகர் ஜுனியர் என்டி ஆர் இடம் பெற்றிருந்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Hyderabad, India

பாகுபலி, பாகுபலி 2 என்ற பிரம்மாண்ட படங்களுக்கு பிறகு ராஜமௌலி இயக்கிய படம் ஆர்ஆர்ஆர். பிரபல தெலுங்கு ஹீரோக்களான ஜுனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்த இந்தப் படம் சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருந்தது. இந்திய அளவில் பிரபல நட்சத்திரங்களான ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்த இந்தப் படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி வசூல் சாதனை படைத்தது.

ஆஸ்கார் 2023 விருது விழாவுக்கு ஆர்ஆர்ஆர் திரைப்படம் 14 பிரிவுகளில் சமர்ப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜனவரி 11-ம் தேதி நடைபெறவுள்ள கோல்டன் குளோப்ஸ் 2023 விருது விழாவில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் இரண்டு பரிந்துரைகளைப் பெற்றுள்ளது. இதற்கு முன்பாக, லாஸ் ஏஞ்சல்ஸின் சீன திரையரங்கில் ஆர்ஆர்ஆர் திரையிடப்படுகிறது. அங்கு 98 வினாடிகளில் மொத்த டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன. இதனை பியாண்ட் ஃபெஸ்ட் நிறுவனம்  தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்த ஆண்டு பாஃப்டா விருதுப் போட்டிக்கான முதற்கட்ட பரிந்துரைப் பட்டியலில், சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான பிரிவில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் இடம்பெற்றுள்ளது. திரைத்துறையில் ஆஸ்கர் விருதுக்கு இணையாக பாஃப்டா விருதுகள் கருதப்படுகின்றன. இந்த விருது சிறந்த நடிகர், நடிகை, வெளிநாட்டுப் படம் என மொத்தம் 25 பிரிவுகளில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் 10 படங்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாகவும், இறுதிப் போட்டிக்கு 5 படங்கள் தேர்வுசெய்யப்படும் எனவும் கூறப்படுகின்றன.

பாஃப்டா விருது படங்கள் பெரும்பாலும் ஆஸ்கர் விருது பெற்றுள்ளன என்பதால் தெலுங்கு ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். முன்னதாக பிரபல ஹாலிவுட் இணையதளமான வெரைட்டி வெளியிட்டுள்ள சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் கணிப்பு பட்டியலில் இந்தியா சார்பில் நடிகர் ஜுனியர் என்டி ஆர் இடம் பெற்றிருந்தது . இந்த ஆஸ்கர் கணிப்பு பட்டியலில் இந்திய நடிகர் ஒருவர் இடம்பெருவது இதுவே முதல்முறை. மேலும் இயக்குநர் ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கிய ராஜமௌலியின் பெயரும் இந்த கணிப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Rajamouli, Ram Charan