முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஜப்பானில் ரிலீஸாகும் ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஜப்பானில் ரிலீஸாகும் ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆர் ஆர் ஆர் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியா பட், ராம்சரண்.

ஆர் ஆர் ஆர் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியா பட், ராம்சரண்.

RRR Japan : நெட் ஃப்ளிக்ஸ் தளத்தில் பார்த்த வெளிநாட்டு திரைக்கலைஞர்கள் குறிப்பாக ஹாலிவுட் கலைஞர்கள் ஆர்.ஆர்.ஆர். படத்தை பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  • 1-MIN READ
  • Last Updated :

ராஜமவுலி இயக்கத்தில், ராம்சரண் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளிவந்த ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் ஜப்பானில் அந்நாட்டு மொழியில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படம் ஓடிடி தளத்தில் வெளியான பின்னர் வரவேற்பு அதிகம் இருப்பதன் காரணமாக, இன்னும் பல்வேறு மொழிகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

பாகுபலி 2 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ராஜமவுலி ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டார். அன்று முதல் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்பட்டது. மேலும் இந்த படத்தில் தெலுங்கில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகியோர் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது.

Chess Chennai 2022: செஸ் சென்னை தீம் பாடலை வெளியிட்டு முதல்வருக்கு நன்றி சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான்!

இந்நிலையில் ஆர்.ஆர்.ஆ. திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த மார்ச் 24-ம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக, படத்தின் ஆக்ஷன் காட்சிகள் பெரிதும் பேசப்பட்டன. பாலத்தில் இருந்து விழும் ரயிலில் இருந்து சிறுவனை மீட்கும் காட்சி, விலங்குகளுடன் ஜூனியர் என்டிஆர் சண்டையிடும் காட்சி, ராம்சரண், ஜூனியர் என்டிஆர் இணைந்து எதிரிகளை துவம்சம் செய்யும் காட்சிகள் உள்ளிட்டவை அதிக வரவேற்பு பெற்றன.

இதேபோன்று செண்டிமெண்ட் எமோசன் காட்சிகளையும் வலுவாக அமைத்து ராஜமவுலி ரசிகர்களுக்கு மிகப்பெரிய திரை விருந்தை அளித்திருப்பார்.

படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் படத்துடன் ஒன்றச் செய்து சிறந்த அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்தன. தியேட்டரில் மட்டும் இந்த படம் ரூ. 1000 கோடிக்கும் அதிகமாக கலெக்ஷன் செய்திருக்கிறது.

ஆப் டெவலப்பராக விஜய்... எதிர்பார்ப்பை கிளப்பும் வாரிசு!

இதன்பின்னர் ஓ.டி.டி. தளத்தில் கடந்த மே 20-ஆம் தேதி வெளியாகி ஓடிடி ஸ்ட்ரீமிங்கிலும் சாதனை படைத்தது. தொடர்ந்து இந்த படத்தை நெட் ஃப்ளிக்ஸ் தளத்தில் பார்த்த வெளிநாட்டு திரைக்கலைஞர்கள் குறிப்பாக ஹாலிவுட் கலைஞர்கள் ஆர்.ஆர்.ஆர். படத்தை பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனால், இன்றளவிலும் இந்த படத்தின் மீதான ஈர்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. இந்நிலையில் அக்டோபர் 21-ம் தேதி ஜப்பானில் திரையரங்குகளில் ஆர்.ஆர்.ஆர். படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Kollywood, Rajamouli