முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சிறந்த படம் உள்பட 4 விருதுகள்.. ஹாலிவுட்டை அதிர விடும் ஆர்ஆர்ஆர் திரைப்படம்!

சிறந்த படம் உள்பட 4 விருதுகள்.. ஹாலிவுட்டை அதிர விடும் ஆர்ஆர்ஆர் திரைப்படம்!

HCA விருதுகளுடன் ஆர்.ஆர்.ஆர். படக்குழு

HCA விருதுகளுடன் ஆர்.ஆர்.ஆர். படக்குழு

அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆஸ்கர் விருது அறிவிப்பு விழாவில் ஆர்ஆர்ஆர் திரைப்பட பாடலுக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சிறந்த படம் உள்பட 4 விருதுகளை ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் பெற்று ஹாலிவுட் திரையுலகை ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் வெளியாகி மிகப்பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் சுமார் ரூ. 1200 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது. குறிப்பாக ஆர்.ஆர்.ஆர். படத்திற்கு இந்தியாவை தாண்டி அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா உள்ளிட்ட நாடுகளிலும் ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.

ஹாலிவுட்டின் முன்னணி இயக்குனரான ஜேம்ஸ் கேமரூன் ஆர்.ஆர்.ஆர். படத்தை 2 முறை பார்த்து, ராஜமௌலியை நேரில் பாராட்டியுள்ளார். படத்தின் கதை சிம்ப்பிளாக இருந்தாலும், அதனை ராஜமவுலி மேக்கிங்கில் பிரமாண்டப் படுத்திக் காட்டினார். இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் விருதுகளை குவித்து வருகிறது. ஆஸ்கர் விருதுக்கு அடுத்ததாக கருதப்படும் கோல்டன் குளோப் விருது, இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்து பாட்டிற்காக கிடைத்தது. இந்த விருதை படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி பெற்றுக் கொண்டார்.

நாட்டுக்கூத்து பாடல் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆஸ்கர் விருது அறிவிப்பு விழாவில் இந்த பாடல் விருதை தட்டிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், Hollywood Critic Association அமைப்பின் 4 விருதுகளை ஆர்.ஆர்.ஆர். படம் பெற்றிருக்கிறது. சிறந்த சர்வதேச படம், சிறந்த ஆக்சன் படம், சிறந்த சண்டைக் காட்சிகள் மற்றும் சிறந்த பின்னணி இசை ஆகியவற்றிற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.ஆர்.ஆர். படத்தின் ஆக்சன் காட்சிகளை கிங் சாலமோன் வடிவமைத்திருந்தார். மிகவும் மதிக்கப்படும் இந்த HCA Film Awards, ஆர்ஆர்ஆர் படத்திற்கு கிடைத்திருப்பது ஹாலிவுட்டிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


First published:

Tags: Rajamouli, Ram Charan