முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சல்மான்கானை சந்தித்த ராஜமௌலி - பரபரக்கும் பாலிவுட்

சல்மான்கானை சந்தித்த ராஜமௌலி - பரபரக்கும் பாலிவுட்

காட்சி படம்

காட்சி படம்

Rajamouli Movie : சல்மான்கான் படத்தை இயக்கும் ராஜமெளலி ?

  • Last Updated :

மும்பையில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் இறுதிக்கட்ட பணியில் இருக்கும் ராஜமௌலி சல்மான்கானை சந்தித்துள்ளார். இந்த தகவல் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திப் படங்கள் கோலோச்சிக் கொண்டிருந்த நேரத்தில் பாகுபலி என்ற ஒரே படத்தால் இந்திய சினிமாவையே புரட்டியவர் ராஜமௌலி. அவரது பாகுபலி 2 படம்தான் இந்திய அளவில் அதிகம் வசூல் செய்த திரைப்படம். அதன் இந்தி பதிப்பு மட்டுமே 500 கோடிகளை தாண்டி வசூலித்தது. அமீர் கானின் பிகே, சல்மான் கானின் சுல்தான் உள்பட எந்தப் படமும் 400 கோடிகள் என்ற எல்லையையே இதுவரை தொட்டதில்லை.

also read : எனிமி நஷ்டம்..விஷால் படத்தை தயாரிக்க தயங்கும் மினி ஸ்டுடியோ?

ராஜமௌலி பாகுபலிக்குப் பிறகு எடுத்திருக்கும் ஆர்ஆர்ஆர் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. 2022 ஜனவரி 7 படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்பட பலமொழிகளில் வெளியாகிறது. பாகுபலி வசூலை இந்தப் படம் முறியடிக்குமா என்று அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், மும்பையில் தனது படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் ராஜமௌலி சல்மான் கானை படப்பிடிப்புதளத்தில் சென்று சந்தித்துள்ளார். அரை மணிநேரம் அவர்கள் பேசியுள்ளனர்.

ராஜமௌலி சல்மான் கான் நடிக்கும் படத்தை இயக்கக்கூடும் என இந்த சந்திப்பை வைத்து திரையுலகில் பேச்சு எழுந்துள்ளது.

பாகுபலி, ஆர்ஆர்ஆர் உள்பட ராஜமௌலியின் அனேகமாக அனைத்துப் படங்களுக்கும் அவரது தந்தை விஜயேந்திர பிரசாத்தே கதை எழுதியுள்ளார். சல்மான் கானின் கடைசி ஹிட்டான பஜ்ரங்கி பைதான் படத்தின் கதையை எழுதியவரும் விஜயேந்திர பிரசாத்தான்.

also read : விக்ரமின் 'மகான்' திரையரங்கில் வெளியாகும் - பிரபல தயாரிப்பாளர் நம்பிக்கை

top videos

    ஏற்கனவே ராஜமௌலி குடும்பத்துடன் தொழில் ரீதியாக தொடர்பு உள்ளதால் ராஜமௌலி சல்மான் கான் படத்தை இயக்கக்கூடும் என்று மும்பை படவுலகு நம்பிக்கையுடன் சொல்கிறது. அதேநேரம், ஆர்.ஆர்.ஆர் படத்தின் புரமோஷனில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கவே ராஜமௌலி சல்மான் கானை சந்தித்தார் என உள்வட்டார தகவல்கள் கூறுகின்றன.ஆர்.ஆர்.ஆர் படத்துக்குப் பிறகு ராஜமௌலி மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்குவது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Rajamouli, Salman khan