ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அருள்நிதி படத்தில் ராஜா ராணி 2 அர்ச்சனா!

அருள்நிதி படத்தில் ராஜா ராணி 2 அர்ச்சனா!

அருள்நிதி - அர்ச்சனா

அருள்நிதி - அர்ச்சனா

திரைப்படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். ராஜா ராணி 2 சீரியலில் இருந்து நான் விலகுவதற்கு அதுவும் ஒரு காரணம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ராஜா ராணி 2 அர்ச்சனா டிமாண்டி காலனி 2 படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகிறார்.

ராஜா ராணி 2 தொலைக்காட்சி தொடரின் மூலம் பிரபலமான விஜே அர்ச்சனா தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். வெங்கி வேணுகோபால் இயக்கும் டிமாண்டி காலனி 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார். டிமாண்டி காலனி முதல் பாகத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அஜய் ஞானமுத்து இதற்கான கதையை எழுதுகிறார்.

விரைவில் இதன் படப்பிடிப்பில் இணையவுள்ள அர்ச்சனா, “இந்தப் படத்தில் நான் அருள்நிதியின் தங்கையாக நடிக்கிறேன். இந்த மாத தொடக்கத்தில் இருந்து எனது பகுதிகளுக்கான படப்பிடிப்பை தொடங்குவேன், இவ்வளவு நல்ல குழுவுடன் நான் திரையுலகில் அறிமுகமாவது மகிழ்ச்சி” என்று தெரிவித்திருக்கிறார்.

அர்ச்சனா தொலைக்காட்சி சீரியலில் இருந்து விலகிய பிறகு ஒப்பந்தமான முதல் திரைப்படம் இதுவாகும். “நான் திரைப்படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். ராஜா ராணி 2 சீரியலில் இருந்து நான் விலகுவதற்கு அதுவும் ஒரு காரணம்” என்று இதுகுறித்து மேலும் தெரிவித்தார் அர்ச்சனா.

வாரிசு ஆடியோ லாஞ்சில் விஜய் மனைவி சங்கீதா ஏன் கலந்துக் கொள்ளவில்லை தெரியுமா?

அதோடு, ”எனது முடிவைப் பற்றி பலர் மிகவும் வருத்தப்பட்டனர். ஆனால் பின்னர், நான் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டு படங்களில் கவனம் செலுத்த விரும்பினேன்” என்றும் குறிப்பிட்டார். சமீபத்தில் இசையமைப்பாளர் தரன்குமாருடன் ஒரு நிமிட இசை வீடியோவான தம்மா துண்டில் அர்ச்சனா இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Tamil Cinema, Vijay tv