கணவரிடமிருந்து ஷில்பா ஷெட்டிக்கு கிடைத்த 38.5 கோடி மதிப்பிலான சொகுசு பங்களா!
கணவரிடமிருந்து ஷில்பா ஷெட்டிக்கு கிடைத்த 38.5 கோடி மதிப்பிலான சொகுசு பங்களா!
ராஜ் குந்த்ரா, ஷில்பா ஷெட்டி
Shilpa Shetty: திருமணத்துக்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை பெருமளவு குறைத்துக் கொண்ட ஷில்பா ஷெட்டி 2008 இல் தோஸ்தானா படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார்.
தொழிலதிபரும் தயாரிப்பாளருமான ராஜ் குந்த்ரா தனது மனைவி நடிகை ஷில்பா ஷெட்டிக்கு தன்னுடைய பெயரில் இருந்த 38.5 கோடி பெறுமானமுள்ள சொத்தை எழுதித் தந்துள்ளார்.
ராஜ் குந்த்ரா ஆபாச பட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது அனைவரும் அறிந்தே. இந்த நிகழ்வுக்கு பிறகு அவர்களுடைய தாம்பத்திய வாழ்க்கையில் விரிசல் விழுந்தது. இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகின. இதனை ஷில்பா ஷெட்டி மறுத்ததோடு அப்படி வதந்தி கிளப்பியவர்ளுக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ராஜ் குந்த்ரா ஜுஹு கடற்கரையில் இருக்கும் தனக்கு சொந்தமான வீட்டை ஷில்பா ஷெட்டியின் பெயருக்கு எழுதி தந்துள்ளார். சுமார் 6000 சதுர அடி கொண்ட இந்த வீட்டில்தான் அவர்கள் வசித்து வருகிறார்கள். இந்த வீட்டின் மதிப்பு சுமார் 38.5 கோடி என்கின்றன தகவல்கள்.
திருமணத்துக்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை பெருமளவு குறைத்துக் கொண்ட ஷில்பா ஷெட்டி 2008 இல் தோஸ்தானா படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். அதன்பிறகு 2014- இல் இதேபோல் ஒரு படத்தில் ஒரேயொரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். சென்ற வருடம் அவரது நடிப்பில் ஹங்கம்மா 2 திரைப்படம் வெளியானது.
தொடர்ச்சியாக படத்தில் நடிக்கும் முடிவெடுத்து இருப்பவர் தற்போது சபீர் கான் இயக்கும் புதிய இந்தி படத்தில் நடித்து வருகிறார். ராஜ் குந்த்ரா சிறை சென்ற பிறகு ஷில்பா ஷெட்டி நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்தான் ராஜ் குந்த்ரா தனது சொத்தை மனைவி பெயருக்கு மாற்றி எழுதி உள்ளார்.
விவாகரத்து வதந்திகளை ஷில்பா ஷெட்டி மறுத்திருந்த நிலையில், இந்த சொத்து பரிமாற்றம் விவாகரத்து வதந்தியை மீண்டும் புதுப்பித்து இருக்கிறது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.