ஃபேசியல் செய்யப் போன இடத்தில் நடிகை ரைஸாவிற்கு நடந்த விபரீதம்

ரைஸா வில்சன்

ஃபேசியல் செய்யப் போன இடத்தில் நடிகை ரைஸா வில்சனின் ஒரு பக்க முகம் வீங்கி விபரீதம் ஏற்பட்டுள்ளது.

  • Share this:
வேலையில்லா பட்டாதாரி படத்தில் வசுந்தரா கதாபாத்திரத்தில் நடித்த கஜோலின் உதவியாளராக நடித்திருந்த ரைஸா வில்சன், பின்னர் பியார் பிரேமா காதல் படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து அனைவரது மத்தியிலும் கவனம் பெற்றார். இந்தப் படம் மாபெரும் வெற்றி பெறவே அடுத்தடுத்து ரைஸா வில்சனுக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்தன. தற்போது தி சேஸ், அலைஸ், காதலிக்க யாருமில்லை, எஃப்.ஐ.ஆர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ரைஸா வில்சன்.

இதனிடையே தமிழ் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் ரைஸா. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர், சமீபத்தில் முக அழகுக்காக ஃபேசியல் செய்ய அழகுகலை மருத்துவரிடம் சென்றதாகவும் அப்போது தேவையற்ற சில ஒப்பனை செயல்முறைகளை அழகுக்கலை மருத்துவர் செய்ததால் தனது முகத்தின் ஒரு பக்கம் வீங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.மேலும் அந்த நபரை தொடர்பு கொள்ள முயன்றதாகவும் ஆனால் அவர் தன்னை சந்திக்கவும் பேசவும் மறுப்பதாகவும் அவரது உதவியாளர்களிடம் கேட்டபோது வெளியூர் சென்றுவிட்டதாக கூறுவதாகவும் ரைஸா குற்றம்சாட்டியுள்ளார். திரைப்பட நடிகை ரைஸாவிற்கு ஃபேசியல் செய்யப்போன இடத்தில் இப்படி ஒரு விபரீதம் நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Sheik Hanifah
First published: