நீச்சல் குளத்தில் தான் நீந்தும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் நடிகை ரைஸா.
விஜய் டிவி-யில் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் மாடலும், நடிகையுமான ரைஸா வில்சன். ஏற்கனவே தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்திருந்த ரைசாவுக்கு பிக் பாஸுக்கு பிறகு வாய்ப்புகள் குவிந்தன.
Vijay TV Raaja Paarvai: திருமணம் முடிந்த கையோடு மீண்டும் விஜய் டிவி-யில் பிரபல நடிகை!
பிக் பாஸில் கலந்துக் கொண்ட ஹரீஷ் கல்யாணுடன் இணைந்து, ரைசா நடித்த ’பியார் பிரேமா காதல்’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. பாலா இயக்கிய வர்மா படத்திலும் நடித்திருந்தார். அந்தப் படம் ஓடிடி-யில் வெளியானது. தற்போது அலைஸ், காதலிக்க யாருமில்லை, எஃப்.ஐ.ஆர், ஹேஷ்டேக் ஆகியப் படங்களில் பிஸியாக உள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ரைசா தனது படங்களை தவறாமல் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தண்ணீர் காதலியான இவர், கடற்கரையில் வித விதமான படங்களை எடுத்து பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது நீச்சல் உடையில், நீச்சல் குளத்தில் நீந்தும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்