சுந்தர்சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் நடிக்கும் படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் ரைசா வில்சன் இணைந்துள்ளார்.
ஒரு பக்கம் நடிப்பு, இன்னொரு பக்கம் இயக்கம் என பிஸியாக இருக்கிறார் சுந்தர் சி. அவரது மனைவியும் நடிகையுமான குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் தயாரிக்கும் புதிய படத்தை சுந்தர் சி இயக்குகிறார். கலகலப்பு 2 திரைப்படத்தில் நடித்தது போல் இதிலும் மூன்று கதாநாயகர்கள் நடிக்கின்றனர். கலகலப்பு 2 படத்தில் ஜீவாவும் ஜெய்யும் நடித்திருந்தனர். உடன் மிர்ச்சி சிவாவும் நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் மிர்ச்சி
சிவாவுக்கு பதில் ஸ்ரீகாந்த் இடம்பிடித்துள்ளார். சுந்தர் சி இயக்கத்தில் ஸ்ரீகாந்த் நடிப்பது இதுவே முதல் முறை.ஆளுக்கு ஒரு நாயகி என்ற கணக்கில் மூன்று முன்னணி நடிகைகளை ஒப்பந்தம் செய்துள்ளனர். அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா மற்றும் மாளவிகா ஷர்மா. இந்நிலையில் சென்னையில் நடந்து வரும் படப்பிடிப்பில் நடிகை ரைசா வில்சன் கலந்து கொண்டுள்ளார்.
இதையும் படிங்க.. லட்சுமிக்கு உண்மையை சொல்ல போகும் கண்ணம்மா… அடுத்த கட்டத்துக்கு நகரும் பாரதி கண்ணம்மா!
இந்த படத்தில் அவர் பாடகியாக நடிக்கிறார். உண்மையில் ரைசா வில்சனுக்கு பாட வராது என்பது அவருக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே அறிந்த ரகசியம். "இதுவரை நான் நடிக்காத வேடம் மிகவும் கலகலப்பாக படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கிறது" என ரைசா வில்சன் தெரிவித்துள்ளார்..பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரைசா வில்சனின் மவுசு. தமிழ் திரையுலகில் அதிகரித்துள்ளது. இந்த வருடம் அரை டஜனுக்கும் மேல் திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க.. லட்சுமிக்கு உண்மையை சொல்ல போகும் கண்ணம்மா… அடுத்த கட்டத்துக்கு நகரும் பாரதி கண்ணம்மா!
இதில் விஷ்ணு விஷால் உடன் நடித்திருக்கும்
எப் ஐ ஆர் திரைப்படம் வரும் 11ஆம் தேதி திரைக்கு வருகிறது. தி சேஸ் மற்றும் டி கே இயக்கியிருக்கும் படம் ஆகியவற்றை ரைசா வில்சன் முடித்துள்ளார். விரைவில் இந்தப் படங்கள் வெளியாக உள்ளன. இவை தவிர ஆலிஸ், காதலிக்க யாருமில்லை, ஹேஸ்டாக் லவ், பொய்க்கால் குதிரை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் பொய்க்கால் குதிரை படத்தில் பிரபுதேவா நாயகனாக நடித்துள்ளார். சுந்தர் சி இன் படம் அவரது முந்தைய படங்களைப் போலவே நகைச்சுவைக்கு முக்கிய மிதந்து எடுக்கப்பட்டு வருகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.