ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கருப்பு உடையில் கலக்கல்! மாடலிங் வீடியோவை வெளியிட்ட ரைசா.. இன்ஸ்டா வைரல்

கருப்பு உடையில் கலக்கல்! மாடலிங் வீடியோவை வெளியிட்ட ரைசா.. இன்ஸ்டா வைரல்

ரைசா

ரைசா

கடந்த சில மாதங்களுக்கு முன் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்த FIR படத்திலும் ரைசா வில்சன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கருப்பு உடையில் ரைசா இன்ஸ்டாவில் வெளியிட்ட மாடலிங் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மாடலிங் துறையில் இருந்து பின்னர் 2017-ம் ஆண்டில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் ரைசா வில்சன்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார்.

நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார். இளன் இயக்கத்தில் யுவன்சங்கர்ராஜாவின் இசை மற்றும் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் ரசிகரகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமாக அமைந்தது.

அதன்பின் தனுசு ராசி நேயர்களே படத்திலும் அதனை தொடர்ந்து வர்மா ஆகிய படங்களில் நடித்தார். மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்த FIR படத்திலும் ரைசா வில்சன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

Also read... கொஞ்சல் மொழி பேசிடும் ஊமை கிளி நீயடி... ஹேப்பி பர்த்டே ஸ்ரீநிதி!

தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் ரைசா தனது மாடலிங் வேலையையும் கைவிடாமல்  இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
 
View this post on Instagram

 

A post shared by Raiza Wilson (@raizawilson)இந்நிலையில் கருப்பு நிற உடையில் நடிகை ரைசா வில்சன் மாடலிங் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actress raiza wilson