Raiza Wilson: நெருக்கமான புகைப்படத்தின் மூலம் காதலரை அறிமுகப்படுத்திய ரைசா வில்சன்?

Raiza Wilson: நெருக்கமான புகைப்படத்தின் மூலம் காதலரை அறிமுகப்படுத்திய ரைசா வில்சன்?

ரைசா வில்சன்

ஆண் நண்பர் ஒருவரின் மடியில் நெருக்கமாக அமர்ந்திருக்கும் ரைசா அந்தப் படத்தை, ஹார்ட் எமோஜியுடன் பகிர்ந்துள்ளார்.

  • Share this:
நடிகர் தனுஷ் அமலா பால் நடித்த, 'வேலை இல்லா பட்டதாரி 2' படத்தில் அறிமுகமானார் நடிகை ரைசா வில்சன். இதை செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்தார். ஆனால் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி, விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிய ’பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.

பின்னர் யுவன் சங்கர் ராஜா தயாரித்த 'பியார் பிரேமா காதல்' படத்தில் பிக் பாஸ் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து நடித்தார், இந்தப் படம் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது நடிப்புக்கு சின்ன இடைவெளி விட்டு விட்டு, மாலத்தீவு சென்று வந்தார்.

raiza wilson boyfriend intimate photo on instagram
ரைசா வில்சன்


Cook With Comali: புகழ் மேல யாருக்கு தான் க்ரஷ் வராது…? குக் வித் கோமாளி பவித்ரா!

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரைஸா, அங்கு தனது படங்களையும், வீடியோக்களையும் தவறாமல் பகிர்ந்து வருகிறார். அந்த பதிவுகள் ரசிகர்களிடமிருந்து நல்ல எண்ணிக்கையிலான லைக்குகளை பெறுகிறது. இந்நிலையில் ரைசாவில் சமீபத்திய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியின் புகைப்படம், அவர் காதல் வயப்பட்டிருக்கிறாரோ என்ற கேள்வியை ரசிகர்களிடம் எழுப்பியுள்ளது.

ஆண் நண்பர் ஒருவரின் மடியில் நெருக்கமாக அமர்ந்திருக்கும் ரைசா அந்தப் படத்தை, ஹார்ட் எமோஜியுடன் பகிர்ந்துள்ளார். அந்த நபரின் முகம் முழுதாக தெரியவில்லை என்றாலும், வெளிநாட்டு நபர் போல தோன்றுகிறது. இவர் காதலரா, நண்பரா என்பதை விரைவில் ரைசா தெளிவுப்படுத்துவார் என எதிர்பார்ப்போம்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: