National Film Awards 2019 | ராகுல் ரவீந்திரன் இயக்கிய படத்திற்கு தேசிய விருது

தெலுங்கில் ராகுல் நவீந்திரன் இயக்கிய chi la sow திரைப்படம் சிறந்த திரைகதைக்கான தேசிய விருதை வென்றுள்ளது.

Web Desk | news18-tamil
Updated: August 9, 2019, 10:40 PM IST
National Film Awards 2019 | ராகுல் ரவீந்திரன் இயக்கிய படத்திற்கு தேசிய விருது
ராகுல் ரவீந்திரன்
Web Desk | news18-tamil
Updated: August 9, 2019, 10:40 PM IST
66வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று அறிவிக்கப்பட்டன.

மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகளை வழங்கி வருகிறது.

விருதுகளை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்க உள்ளார். இன்று வெளியிடப்பட்ட விருது வென்றவர்கள் அறிவிப்பில், உத்தரகாண்ட் மாநிலம் சிறந்த சினிமா ஃபிரண்ட்லி ஸ்டேட் என்ற விருதை வென்றுள்ளது.


தெலுங்கில் ராகுல் நவீந்திரன் இயக்கிய chi la sow திரைப்படம் சிறந்த திரைகதைக்கான தேசிய விருதை வென்றுள்ளது. ராகுல் ரவீந்திரன் பின்னணி பாடகி சின்மயின் கணவர்.



சிறந்த தெலுங்கு மொழி படமாக கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடி படம் தேர்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆடை வடிமைப்பாளர் விருதும் இந்த படத்திற்கே வழங்க்கப்பட்டுள்ளது.

சிறந்த கோரியோகிராபர் விருது பத்மாவத் படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த பாடகருக்கான விருதை பத்மாவத் படத்தின் மிஸிரியா பாடலை பாடிய அர்ஜித் சிங்கிற்கு வழங்கப்பட்டது.

பாரம் என்ற தமிழ்படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது. கே.ஜி.எஃப் படத்திற்கு சிறந்த ஆக்‌ஷன் படத்த்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

First published: August 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...