முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / A Film by A.R.RAHMAN டைட்டிலுக்கு ரஹ்மானின் ரியாக்‌ஷன்!

A Film by A.R.RAHMAN டைட்டிலுக்கு ரஹ்மானின் ரியாக்‌ஷன்!

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான்

இயக்குனர் மிஷ்கின் இளையராஜாவின் பெயரை தனது பெயரைவிட பெரிய எழுத்துக்களில் போடுவது, அவரது பெயருக்கு முன்னுரிமை தருவது என இளையராஜாவை தனது படத்தின் போஸ்டர்களில் கௌரவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் டிசம்பர் 24 அத்ரங்கி ரே திரைப்படம் வெளியானது. தனுஷ், சாரா அலிகான், அக்ஷய் குமார் நடித்திருந்தனர்.

நேரடியாக டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் இந்தப் படம் வெளியானது. இதன் தமிழ்ப் பதிப்பிற்கு கலாட்டா கல்யாணம் என பெயர் வைத்திருந்தனர். டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வெளியான புதிய படங்களில் முதல் நாளில் அதிக பார்வையாளர்களைப் பெற்ற திரைப்படம் என்ற பெருமை அத்ரங்கி ரே படத்துக்கு கிடைத்தது. டிஸ்னி + ஹாட் ஸ்டாரின் டாப் இந்திய திரைப்படங்களில் தொடர்ந்து இந்தப் படம் முதலிடத்தில் உள்ளது.

அத்ரங்கி ரேயின் சிறப்பம்சங்களில் ரஹ்மானின் இசையும் ஒன்று. அதனை கௌரவப்படுத்தும்விதமாக படம்  முடிந்ததும் ஏ ஃபிலிம் பை ஏ.ஆர்.ரஹ்மான் என டைட்டில் கொடுத்திருந்தார் ஆனந்த் எல்.ராய். பொதுவாக ஏ ஃபிலிம் பை என்று இயக்குனரின் பெயரை போடுவதே உலக வழக்கம். அதனை முதன்முறையாக மாற்றி இசையமைப்பாளரின் பெயரைப் போட்டு அவருக்கு கௌரவம் சேர்த்திருந்தார் ஆனந்த் எல்.ராய்.

Rahman reaction to the title of a film by AR RAHMAN in Atrangi re, Dhanush Atrangi Re, Atrangi Re release, Atrangi Re movie, Atrangi Re theatre release, ar rahman, ar rahman songs, ar rahman latest songs, ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள், ரஹ்மான் லேட்டஸ்ட் பாடல்கள், dhanush tamil movies, தனுஷ், ஜகமே தந்திரம் தனுஷ், தனுஷ் படங்கள், ஜகமே தந்திரம் ரிலீஸ், அத்ராங்கி ரே, அக்‌ஷய் குமார், சாரா அலிகான்

இது குறித்து இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, "இந்தியாவுக்கு இன்னும் நிறைய ஆனந்த் ராய்கள் தேவைப்படுகிறார்கள். அவர் இசையமைப்பாளர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும், மதிப்பும் இன்னும் கடினமாக பணிபுரிய தூண்டுதலாக அமையும்" என்று பதிலளித்துள்ளார் ரஹ்மான். இயக்குனர் மிஷ்கின் இளையராஜாவின் பெயரை தனது பெயரைவிட பெரிய எழுத்துக்களில் போடுவது, அவரது பெயருக்கு முன்னுரிமை தருவது என இளையராஜாவை தனது படத்தின் போஸ்டர்களில் கௌரவித்துள்ளார். ஆனால், ஏ ஃபிலிம் பை என இசையமைப்பாளரின் பெயரைப் போட்டது இதுவே முதல்முறை.  இசையமைப்பாளரின் பெயரைப் போட்டது இதுவே முதல்முறை.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: AR Rahman, Tamil Cinema