Rakul Preet Singh: காண்டம் பரிசோதனையாளர் வேடத்தில் நடிக்கும் ரகுல் ப்ரீத் சிங்

Rakul Preet Singh: காண்டம் பரிசோதனையாளர் வேடத்தில் நடிக்கும் ரகுல் ப்ரீத் சிங்

ரகுல் ப்ரீத் சிங்

முன்னணி நடிகையான ரகுல் ப்ரீத் சிங், காண்டம் பரிசோதனை செய்கிறவராக ஒரு படத்தில் நடிக்கிறார். இந்தியில் தயாராகும் படம், மற்ற பிராந்திய மொழிகளிலும் வெளியாகிறது.

  • Share this:
    முன்னணி நடிகையான ரகுல் ப்ரீத் சிங், காண்டம் பரிசோதனை செய்கிறவராக ஒரு படத்தில் நடிக்கிறார். இந்தியில் தயாராகும் படம், மற்ற பிராந்திய மொழிகளிலும் வெளியாகிறது.

    விந்து தானம், கால் பாய்ஸ் என்று வித்தியாசமான களங்களில் இந்தியில் படங்கள் வருகின்றன. பொதுவாக இது போன்ற படங்களை விரும்பி செய்கிறவர் அல்லது தேடி கண்டடைகிறவர் நடிகர் ஆயுஷ்மான் குரானா. இந்த முறை அந்த வாய்ப்பு ரகுல் ப்ரீத் சிங்குக்கு கிடைத்திருக்கிறது.

    தயாரிப்பாளர் ரோனி க்ரூவிலா சின்ன பட்ஜெட்டில் தொடர்ச்சியாக படங்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளார். வித்தியாசமான கதைக்களம் மட்டுமே இங்கே முக்கியம். அப்படி அவர் தயாரிக்கும் படம் ஒன்றில் ரகுல் ப்ரீத் சிங் காண்டம் பரிசோதனை செய்கிறவராக நடிக்கிறார்.

    காண்டம் தயாரிக்கும் நிறுவனங்கள், புதியவகை காண்டத்தை அறிமுகப்படுத்துகையில் இளம் பெண்களை வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள். அந்த புதிய காண்டத்தின் செயல்திறனை அந்த பெண்கள் சோதித்து சொல்ல வேண்டும். இப்படியொரு வித்தியாசமான கதாபாத்திரத்தில்தான் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். படத்தின் கதையை கேட்டதும் உடனே அவர் ஒத்துக் கொண்டதாக செய்தி. சொல்ல வேண்டியதில்லை, முழுக்க நகைச்சுவையில் இந்தப் படம் தயாராகிறது.

    படத்தின் இயக்குநர் மற்றும் பிற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிக்க இருக்கின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: