முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மாப்ள... மாப்பு... காமெடியில் கலக்கும் ராகவா லாரன்ஸ் - வடிவேலு காம்போ - 'சந்திரமுகி 2' பட செம அப்டேட்

மாப்ள... மாப்பு... காமெடியில் கலக்கும் ராகவா லாரன்ஸ் - வடிவேலு காம்போ - 'சந்திரமுகி 2' பட செம அப்டேட்

வடிவேலு - ராகவா லாரன்ஸ்

வடிவேலு - ராகவா லாரன்ஸ்

மற்றொரு பக்கம் காமெடி காட்சியில் நடிக்கும் ராகவா லாரன்ஸ் - வடிவேலுவின் படத்தை ''முழுசாக சந்திரமுகியாக மாறிய வடிவேலு, கட்டி அணைக்கும் ராகவா லாரன்ஸ்...'' என்ற கேப்சனுடன் லைக்கா நிறுவனம் பகிர்ந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் படமான சந்திரமுகி வெளியாகி கிட்டத்தட்ட 18 வருடங்களாகிறது. சிவாஜி புரொடக்சன்ஸ் சார்பாக பிரபு தயாரித்த இந்தப் படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதற்கு முந்தைய படமான பாபா படம் தோல்வியடைந்த நிலையில் சந்திரமுகி இசை வெளியீட்டு விழாவில் நான் யானை இல்லை குதிரை, யானை விழுந்தால் எழுந்திருக்க தாமதாமகும் குதிரை சட்டென எழுந்துவிடும் என்று பேசியிருப்பார். அதற்கேற்ப சந்திரமுகி மூலம் சொல்லி அடித்தார் ரஜினிகாந்த்.

ஜோதிகாவுக்கு முக்கியத்துவம் உள்ள கதாப்பாத்திரம் உள்ள இந்தப் படத்தில் ரஜினிகாந்த் எப்படி நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார் என பலருக்கும் ஆச்சரியமாக இருந்திருக்கும். அதற்கேற்ப படம் முழுக்க ஜோதிகா ஸ்கோர் செய்ய, கிளைமேக்ஸில் தனது லகலகலக என்ற ஒற்றை வார்த்தையின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ரஜினிகாந்த் தன் பக்கம் திருப்பினார்.

வடிவேலுவின் காமெடியாக இருக்கட்டும், வித்யாசாகரின் பாடல்களாக இருக்கட்டும் இன்றளவும் ரசிகர்களால் மறக்க முடியாததாக இருந்துவருகிறது. இதனையடுத்து சந்திரமுகி 2 ஆம் பாகம் அறிவிக்கப்பட்டபோது ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியது. அதற்கேற்ப ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு, இசை - கீரவாணி அறிவிப்புகள் வெளியானது.

முதற்பாகத்தில் இருந்து வடிவேலு மட்டும் 2 ஆம் பாகத்தில் இடம்பிடித்திருக்கிறார். முதல் பாகம் இமாலய வெற்றி என்பதால் அந்த அளவுக்கு இரண்டாம் பாகம் இருக்கும் என்பதால் அந்த அளவுக்கு இரண்டாம் பாகம் இருக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளை நாங்கள் படமாக்கி வருகிறோம். சந்திரமுகி முதல் பாகத்தில் ஜோதிகாவின் நடிப்பு வியப்பு அளிக்கக் கூடியது. தற்போது இரண்டாம் பாகத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டுவருகின்றன. ஜோதிகாவின் நடிப்பை ஈடு செய்வது சாத்தியமற்றது என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்தப் படத்தின் 3 ஆம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் படக்குழுவினர் அனைவரும் எடுத்துக்கொண்ட குரூப் போட்டோவையும் வெளியிட்டுள்ளது. அதில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா, சுரேஷ் மேனன், மஹிமா நம்பியார், லட்சுமி மேனன், ரவி மரியா, ஸ்ருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். மற்றொரு பக்கம் காமெடி காட்சியில் நடிக்கும் ராகவா லாரன்ஸ் - வடிவேலுவின் படத்தை ''முழுசாக சந்திரமுகியாக மாறிய வடிவேலு, கட்டி அணைக்கும் ராகவா லாரன்ஸ்...'' என்ற கேப்சனுடன் லைக்கா நிறுவனம் பகிர்ந்துள்ளது.

First published:

Tags: Actor Raghava lawrence, Actor Vadivelu