இனிய நினைவுகள்... பிரபுதேவாவுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த லாரன்ஸ்

பிரபுதேவாவுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இயக்குநர் ராகவா லாரன்ஸ் தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இனிய நினைவுகள்... பிரபுதேவாவுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த லாரன்ஸ்
பிரபு தேவா உடன் ராகவா லாரன்ஸ்
  • Share this:
கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் திரைபிரபலங்கள் பலரும் தொடர்ச்சியாக சமூகவலைதளங்களில் இயங்கி வருகிறார்கள். அதில் ராகவா லாரன்ஸ் கொஞ்சம் வித்தியாசம்.

கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பலரிடம் உதவியை கேட்டுப் பெறுவது தொடங்கி, தான் செய்த உதவி, நிவாரணம், அரசின் செயல்பாடுகளை பாராட்டுவது ஆகியவற்றை பதிவிட்டு வருகிறார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தானே பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார்.

சமீபத்தில் ரஜினிகாந்துடன் உழைப்பாளி படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்திருந்த அவர், தற்போது நடன இயக்குநர் பிரபுதேவாவுடன் இருக்கும் பழைய புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். இந்த பதிவைப் பார்த்த அவரது ரசிகர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து பணிபுரிவதைப் பார்க்க ஆவலாக இருப்பதாகவும் கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.


நடன இயக்குநராக இருந்து இயக்குநராக மாறி பாலிவுட்டில் படம் இயக்கிய பிரபுதேவாவைத் தொடர்ந்து தற்போது பாலிவுட்டில் லக்‌ஷ்மி பாம் என்ற படத்தை இயக்குநராக கால் பதித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.அண்ணாமலை படத்தில் ரஜினி நடித்துக் கொண்டிருந்த போது பிரபுதேவாவிடம் லாரன்ஸையும் சேர்த்துக் கொள்ளுமாறு ரஜினிகாந்த் சொன்னதாகவும் கூறப்படுகிறது. லாரன்ஸ் பல மேடைகளில் ரஜினிகாந்த் இல்லை என்றால் தான் இல்லை என்று பேசியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
First published: July 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading