ஹீரோவாகிறார் நடிகர் லாரன்ஸின் தம்பி எல்வின்

தனது தம்பி தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கும் படம் குறித்த தகவல்களை நடிகர் லாரன்ஸ் வெளியிட்டுள்ளார்.

ஹீரோவாகிறார் நடிகர் லாரன்ஸின் தம்பி எல்வின்
தனது தம்பியுடன் ராகவா லாரன்ஸ்
  • Share this:
தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக இருந்து இயக்குநர், நடிகர், தயாரிப்பாளராக உயர்ந்தவர் ராகவா லாரன்ஸ். அவரது தம்பி எல்வின் தனது அண்ணன் இயக்கிய படங்களில் அவ்வப்போது தலைகாட்டி வந்தார். ஆனால் இதுவரை ஹீரோவாக நடித்ததில்லை. இந்நிலையில் தம்பியை தமிழ் சினிமாவில் ஹீரோவாக்கி அழகு பார்க்க லாரன்ஸ் முடிவெடுத்துள்ளார்.

இதுகுறித்து தனது பேஸ்புக்கில் கருத்து பதிவிட்டிருக்கும் லாரன்ஸ், இன்று என் தம்பியின் பிறந்தநாள். ஒவ்வொரு ஆண்டும் நான் எனது தம்பிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைப்பேன். அதேபோல் இந்த வருடமும் மிகப்பெரிய சர்ப்ரைஸ் காட்க்திருக்கிறது. அதற்கான அறிவிப்பு தான் இது.

எனது தம்பியின் கனவே சினிமா நடிகராக வேண்டும் என்பதுதான். அது இப்போது நிறைவேற போகிறது. நாங்கள் நாங்கள் பல நாட்கள் காத்திருந்து தற்போது ஒரு நல்ல திரைக்கதை அமைந்துள்ளது. ராகவேந்திரா புரொடக்‌ஷன் இந்தப் படத்தைத் தயாரிக்க ராஜா இயக்க உள்ளார். கொரோனா பிரச்னை முடிந்த பின்னர் படப்பிடிப்பு துவங்க உள்ளது” என்று கூறியுள்ளார் லாரன்ஸ்.


மேலும் படிக்க: எனக்கு கொரோனா பாதிப்பா? - நயன்தாரா விளக்கம்

திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக அறக்கட்டளை ஒன்றை நடத்தி வரும் லாரன்ஸ், பல்வேறு உதவிகளைச் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
First published: June 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading