முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ராகவா லாரன்ஸின் 'ருத்ரன்': வெளியானது ரீமேக் செய்யப்பட்ட 'பாடாத பாட்டெல்லாம்' பாடல்

ராகவா லாரன்ஸின் 'ருத்ரன்': வெளியானது ரீமேக் செய்யப்பட்ட 'பாடாத பாட்டெல்லாம்' பாடல்

ருத்ரன் பட பாடாத பாட்டெல்லாம் பாடலில் ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி ஷங்கர்

ருத்ரன் பட பாடாத பாட்டெல்லாம் பாடலில் ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி ஷங்கர்

ராகவா லாரன்ஸின் ருத்ரன் திரைப்படத்திற்காக ரீமேக் செய்யப்பட்ட பாடாத பாட்டெல்லாம் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

வீரத்திருமகன் படத்தில் இடம்பெற்ற பாடாத பாட்டெல்லாம் என்ற பாடலை ருத்ரன் திரைப்படத்திற்காக ரீமேக் செய்து வெளியிட்டுள்ளனர். ஏ.சி.திரிலோகசந்தர் இயக்கத்தில் 1962 ஆம் ஆண்டு வெளியானதிரைப்படம் வீரத்திருமகன். இந்த திரைப்படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில்,  கண்ணதாசன் எழுதிய பாடல் 'பாடாத பாட்டெல்லாம் பாட வந்தால்'. பி.பி ஸ்ரீனிவாஸ் மற்றும் எஸ்.ஜானகி ஆகியோர் இணைந்து பாடிய இந்தப் பாடல் அந்த காலத்திலேயே பெரும் வரவேற்பை பெற்றது.

வீரத்திருமகன் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை 62 ஆண்டுகளுக்குப் பிறகு ரீமேக் செய்துள்ளனர்.  கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் திரைப்படத்திற்காக 'பாடாத பாட்டெல்லாம்' பாடலை ரீமேக் செய்து வெளியிட்டுள்ளனர். இசையை மாற்றியுள்ள நிலையில் கண்ணதாசன் எழுதிய வரிகளில் படக்குழுவினர் எதையும் மாற்றவில்லை.

' isDesktop="true" id="889800" youtubeid="CkkALXOJT_Y" category="cinema">

இந்தப் பாடலை இசையமைப்பாளர் தரண் குமார் மறு உருவாக்கம் செய்துள்ளார். மேலும் சத்ய பிரகாஷ் மற்றும் நித்யஸ்ரீ வெங்கட்ராமன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். பாடாத பாட்டெல்லாம் ரீமேக் பாடல் வீடியோ தற்போது வைரலாக தொடங்கியுள்ளது.

ருத்ரன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஆனால் இந்தப் பாடலை தரண்குமார் மறு உருவாக்கம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ருத்ரன் படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்க பிரியா பவானி சங்கத் நாயகியாக நடிக்கிறார். இந்த திரைப்படம் தமிழ் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகவுள்ளது.

First published:

Tags: Actor Raghava lawrence, Priya Bhavani Shankar