முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற லாரன்ஸ்... காரணம் இது தான்!

ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற லாரன்ஸ்... காரணம் இது தான்!

ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற லாரன்ஸ்

ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற லாரன்ஸ்

சந்திரமுகி 2 திரைப்படத்தில் நாயகனாக நடிக்க அனுமதி வழங்கிய நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார் ராகவா லாரன்ஸ். அந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று மைசூரில் தொடங்கியுள்ளது. 

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடிக்கும் ராகவா லாரன்ஸ் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். 

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். அந்த திரைப்படத்தையும் பி. வாசு இயக்குகிறார்.  லைகா நிறுவனம் தயாரிக்கும் அந்த திரைப்படத்தில் வடிவேலு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியான நிலையில், இன்று படத்தின் படப்பிடிப்பை மைசூரில் தொடங்கி உள்ளனர்.  இந்த நிலையில் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடிக்க அனுமதி வழங்கிய நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ராகவா லாரன்ஸ் வாழ்த்து பெற்றார்.

ராகவா லாரன்ஸ் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என பலமுறை கூறியுள்ளார். இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்த ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தில் அவர் நாயகனாக நடிக்க இருப்பதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.

Also read... நடிகர் பிரதாப் போத்தன் உடல்நலக்குறைவால் காலமானார்

இன்று தொடங்கி இருக்கும் சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பை நான்கு மாதங்களில் முடிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படமும் முதல் பாகம் போல அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என படக்குழுவினர் நம்புகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Raghava lawrence, Rajini Kanth