ஜெய் பீம் படத்தின் நிஜ கதை நாயகி ராஜாக்கண்ணு மனைவி பார்வதியை சந்தித்து ஆசி பெற்றுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.
நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெய் பீம்’. இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ளார். சூர்யாவின் 39-வது படமான இதில், பிரகாஷ் ராஜ், கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இருளர் சமூகத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு - பார்வதி ஆகியோர் சந்தித்த பிரச்னைகளையும், அவர்களுக்கு நீதி வாங்கித் தந்த அப்போதைய வழக்கறிஞர் சந்துருவையும் மையப்படுத்தி இப்படம் இயக்கப்பட்டிருந்தது.
ஜெய் பீம் படத்தைப் பார்த்த ரசிகர்களும், பிரபலங்களும் படக்குழுவினருக்கு தங்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் யூ-ட்யூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த பார்வதி, தான் வறுமையில் இருப்பதாக தெரிவித்தார். இதையறிந்த நடிகர் ராகவா லாரன்ஸ், பார்வதிக்கு தனது சொந்த செலவில் வீடு கட்டி தருவதாகக் கூறினார்.

லாரன்ஸ் - பார்வதி அம்மாள்
இந்நிலையில்
பார்வதி அம்மாளை நேரில் சந்தித்துள்ளார் ராகவா லாரன்ஸ். அப்போது, ’நீங்கள் என்னுடைய பாட்டி போலவே இருக்கிறீர்கள், அவர் இப்போது
உயிரோடு இல்லை. ஆனால் உங்கள் வடிவத்தில் என்னுடைய பாட்டியை பார்க்கிறேன்’ என்று கூறி அவருடைய காலில் விழுந்து
ஆசிர்வாதம் பெற்றுள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.