ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிறந்தநாளன்று ரஜினிகாந்தை சந்தித்த ராகவா லாரன்ஸ் !

பிறந்தநாளன்று ரஜினிகாந்தை சந்தித்த ராகவா லாரன்ஸ் !

பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்திடம் வாழ்த்து பெற்ற ராகவாலாரன்ஸ்

பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்திடம் வாழ்த்து பெற்ற ராகவாலாரன்ஸ்

பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்திடம் வாழ்த்து பெற்ற ராகவாலாரன்ஸ்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ராகவா லாரன்ஸ் தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

நடன இயக்குனர், நடிகர், திரைப்பட இயக்குனர் என பன்முகம் கொண்டவராக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் தன்னுடைய பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.  இதை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.  அது குறித்த புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியையும் ராகவா லாரன்ஸ் வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகை அதிதி ராவின் ஹிட் தமிழ் பாடல்கள் ஒரு லிஸ்ட்!

அத்துடன் தன்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளிலும் நல்ல விஷயங்களை செய்ய திட்டமிட்டதாகவும், அந்த வகையில் இன்று அன்னதானம் வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.  நடிகர் ராகவா லாரன்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் தற்போது நடித்தவரும் ருத்ரன் திரைப்படத்திலிருந்து Glimpse வீடியோவை இன்று மாலை அப்பாடக்குழுவினர் வெளியிடுகின்றனர்.

அந்த திரைப்படம் ஆக்சன் ஃபார்முலாவில் உருவாகி வருகிறது.  மேலும் ருத்ரன் திரைப்படத்தை வரும் கோடை விடுமுறையில்  வெளியிட பட குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Sreeja
First published:

Tags: Actor Raghava lawrence, Kollywood, Rajinikanth, Tamil Cinema