ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் படத்தின் ‘க்ளிம்ஸ்’ வீடியோ வெளியானது…

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் படத்தின் ‘க்ளிம்ஸ்’ வீடியோ வெளியானது…

ருத்ரன் படத்தில் ராகவா லாரன்ஸ்

ருத்ரன் படத்தில் ராகவா லாரன்ஸ்

ரஜினி நடிப்பில் மெகா ஹிட்டான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகிவரும் ருத்ரன் திரைப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

  இந்த படத்தில் லாரன்சுடன் சரத்குமார், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்த படத்தை கதிரேசன் இயக்கி தயாரிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் ருத்ரன் படத்திற்கு இசையமைக்கிறார்.

  இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் பிறந்தநாளையொட்டி ருத்ரன் படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 38 வினாடிகள் ஓடக்கூடியதாக கட் செய்யப்பட்டிருக்கும் இந்த வீடியோவில், சென்னையை மையப்படுத்தி அதிரடி ஆக்ஷன் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

  ருத்ரன் படத்திற்கு கேபி திருமாறன் கதை மற்றும் திரைக்கதையை எழுத, எடிட்டிங் பணியை ஆண்டனி கவனிக்கிறார். ஸ்டன்ட் சிவா. கலை பி. ராஜு. நடன காட்சியமைப்பு ஸ்ரீதர் மாஸ்டர்.

  ' isDesktop="true" id="827364" youtubeid="PFbZkMhf3K0" category="cinema">

  ராகவா லாரன்ஸ் தற்போது ருத்ரன், அதிகாரம், சந்திரமுகி 2, துர்கா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது.

  விஜய்யின் தளபதி 67 படத்தில் இணைகிறாரா இந்த மலையாள முன்னணி நடிகர்?

  ரஜினி நடிப்பில் மெகா ஹிட்டான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. முதல் பாகத்தை இயக்கிய பி வாசு இந்தப் படத்தையும் இயக்கி வருகிறார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Actor Raghava lawrence