ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

லோகேஷ் கனகராஜின் கைதி 2 படத்தில் ராகவா லாரன்ஸ்?

லோகேஷ் கனகராஜின் கைதி 2 படத்தில் ராகவா லாரன்ஸ்?

லோகேஷ் கனகராஜ் - ராகவா லாரன்ஸ்

லோகேஷ் கனகராஜ் - ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் தற்போது ரஜினிகாந்தின் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகமான 'சந்திரமுகி 2' படப்பிடிப்பில் உள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  லோகேஷ் கனகராஜின் கைதி 2 படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

  பன்முக திறமை கொண்ட ராகவா லாரன்ஸ் தென்னிந்தியாவில் மிகவும் பிஸியான நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார். அவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே ​​'கைதி 2' படத்தில் ராகவா லாரன்ஸ் இடம்பெற்றிருப்பதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. லோகேஷ் கனகராஜ் கடைசியாக இயக்கிய 'விக்ரம்' படத்தில் கமல்ஹாசன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் ராகவா லாரன்ஸ் அணுகப்பட்டார். ஆனால் கமிட்மென்ட் காரணமாக அவரால் அப்போது நடிக்கமுடியவில்லை. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு, தற்போது ராகவா லாரன்ஸுக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் லோகேஷ் கனகராஜின் 'கைதி 2' படத்தில் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.

  'கைதி 2' படத்தில் சூர்யா பிரபலமான கதாபாத்திரமான ரோலக்ஸாக காணப்படுவார். அவரது சகோதரர் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் அவர் நீட்டிக்கப்பட்ட கேமியோவில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லோகேஷ் கனகராஜ் மற்றும் கார்த்தி இருவரும் தங்களது முந்தைய நேர்காணல்களில், விஜய்யுடன் 'தளபதி 67' படத்தை முடித்தவுடன் 'கைதி 2' மீண்டும் தொடங்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். எனவே, 'கைதி 2' 2023-ம் ஆண்டின் இறுதியில் அல்லது 2024-ன் தொடக்கத்தில் தொடங்கும் எனவும் 2024-ல் திரையரங்குகளில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

  திருமண தேதி, பத்திரிக்கை இரண்டிலும் அம்மாவை முன்னிலைப்படுத்திய கெளதம் கார்த்திக்!

  இதற்கிடையில், ராகவா லாரன்ஸ் தற்போது ரஜினிகாந்தின் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகமான 'சந்திரமுகி 2' படப்பிடிப்பில் உள்ளார். இதன் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி.வாசு, இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார். இதில் வடிவேலு மற்றும் ராதிகா சரத்குமார் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஆனால் படத்தின் கதாநாயகி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Raghava lawrence, Lokesh Kanagaraj