ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரோமியோ ஜுலியட் இயக்குனரின் புதிய பட ஹீரோ யார் தெரியுமா?

ரோமியோ ஜுலியட் இயக்குனரின் புதிய பட ஹீரோ யார் தெரியுமா?

இயக்குநர் லக்‌ஷ்மன்

இயக்குநர் லக்‌ஷ்மன்

வாட்ஸ் ஆப் பார்வர்ட் மெசேஜ்களை வைத்து விவசாயம் குறித்த படத்தை எடுப்பதா என லக்‌ஷ்மனின் பூமி படம் விமர்சிக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ரோமியோ ஜுலியட், போகன் படங்களை இயக்கிய லக்ஷ்மண் புதிய படம் இயக்குகிறார். லைகா தயாரிக்கும் இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கயிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

லக்ஷ்மண் அடிப்படையில் தயாரிப்பாளர். எஸ்.ஜே.சூர்யா, நயன்தாரா நடித்த கள்வனின் காதலி படத்தை தயாரித்தவர். பல வருட இடைவெளிக்குப் பின் ரோமியோ ஜுலியட் படத்தின் மூலம் இயக்குனராக திரும்பி வந்தார். ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்த அப்படம் வெற்றி பெற உடனடியாக போகன் படத்தை ஆரம்பித்தார்.

விவாகரத்து அறிவிப்பை திடீரென நீக்கிய சமந்தா - குழப்பத்தில் ரசிகர்கள்!

தனி ஒருவன் வெற்றிக்குப் பின் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி இணைந்த படம் என்பதால் போகனுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதனை படம் பூர்த்தி செய்யவில்லை என்றாலும் முதலுக்கு மோசம் செய்யவில்லை படம். அதையடுத்து மீண்டும் ஜெயம் ரவியை வைத்து பூமி படத்தை இயக்கினார். வாட்ஸ் ஆப் பார்வர்ட் மெசேஜ்களை வைத்து விவசாயம் குறித்த படத்தை எடுப்பதா என பூமி படம் விமர்சிக்கப்பட்டது. லக்ஷ்மண் இதுபோன்ற எதிர்மறை விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். ஆனாலும், அவரை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தை பூமி படம் ஏற்படுத்தியது.

ஆஸ்கர் விருது பட்டியலில் சூர்யா, ஜோதிகா மற்றும் உதயநிதி ஸ்டாலின்!

நீண்ட இடைவெளி எடுத்து அடுத்தப் படத்துக்கான ஸ்கிரிப்டை தயார் செய்துள்ளார் லக்ஷ்மண். இந்தப் படத்தை லைகா தயாரிப்பதாகவும், ராகவா லாரன்ஸ் நடிப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. ராகவா லாரன்ஸ் கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படம் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் லக்ஷ்மண் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Shalini C
First published:

Tags: Actor Jayam Ravi, Actor Raghava lawrence, Raghava lawrence